கருணாநிதியின் குரல் மீண்டும் ஒலிக்கும் - முரசொலி பவளவிழாவில் முழங்கிய வைகோ
முரசொலி பவளவிழாவில் பேசிய வைகோ, முரசொலி பற்றியும், கருணாநிதி பற்றியும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
சென்னை: மேடையில் கருணாநிதி இருப்பதாக மானசீகமாக கருதி பேசுகிறேன் என்று கூறி முரசொலி பவளவிழாவில் பேசினார் வைகோ. 11 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மேடையில் உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.
மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா செப்டம்பர் 5ஆம்தேதியான இன்று கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது.

முரசொலி பவளவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார் வைகோ. முன்னதாக ஸ்டாலினுக்கு வைகோ பொன்னாடை போர்த்தியபோது திமுக தொண்டர்கள் பேரெழுச்சி முழக்கமிட்டனர்.
11 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மேடையில் வைகோ உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.
மேடையில் கருணாநிதி இருப்பதாக மானசீகமாக கருதி பேசுகிறேன் என்று கூறிய வைகோ, கருணாநிதியின் என் உயிரினும் மேலான உடன்பிறப்பே என்ற குரல் மீண்டும் ஒலிக்கும் என்று கூறினார்.
வரலாற்று சிறப்பு மிக்க நாளில் முரசொலி பவளவிழா நடைபெறுகிறது. அண்ணாவின் எல்லையற்ற அன்பை பெற்றவர் கருணாநிதி.
சேரன் என்ற புனை பெயரில் பேனாமுனையை வாள்முனையாக்கினார் கருணாநிதி. சேரன் செங்குட்டுவன் தீட்டும் சிலப்பதிகாரம் என முரசொலியில் அண்ணா எழுதினார்.
1974-ல் என்னுடைய உடல்நிலை நலிந்த போது மிகவும் வருந்தியவர் கருணாநிதி. என்னை மீண்டும் சிகிச்சை பெறச் சொன்னார். வேலூரில் சிகிச்சை பெற கருணாநிதியே உத்தரவிட்டதாக கூறினார்.
பழைய நினைவுகளை மேடையில் அசைபோட்டார் வைகோ. நெருக்கடி நிலை பிரகடனம் பற்றியும் பேசினார் வைகோ.
தம்பி வா.. தலைமையேற்க வா கருணாநிதியை அழைத்தார் அண்ணா. அந்த அழைப்பும் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கிறது என்று கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications