தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து....ஜெ. அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சரியான சவுக்கடி: வைகோ
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்து அளிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கான சரியான சவுக்கடி என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேரவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதை இரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கதக்கதாகும். ஜனநாகயத்திற்கக் கிடைத்த வெற்றி ஆகும்.

சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்தியதற்கும், ஆளுங்கட்சியினர் எதேச்சதிகாரத்திற்கும், உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்து இருக்கின்றது.
கடந்த நான்கரை ஆண்டுக்காலமாக, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலைக் கடுமையாக ஒடுக்கி, ஆளுங்கட்சியினர் நடத்திய ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அணுகுமுறையே காரணம் ஆகும்.
தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைப் போன்று நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் மன்றமும் ஜெயலலிதாவுக்குத் தக்க தண்டனை வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications