நான் ஜெயிலுக்குப் போறேன்.. பொடா முதல் "தேச துரோகம்" வரை... வைகோவின் சிறைவாழ்க்கை!
வைகோ சிறைக்குப் போவது புதிதல்ல. பொடா வழக்கில் 19 மாதம் சிறையில் இருந்த அவர், தற்போது மீண்டும் ஒரு சிறைவாசத்தை அவர் சந்தித்துள்ளார்.
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மீண்டும் ஒருமுறை சிறைவாசம் வரவேற்றுள்ளது. அவருக்கு சிறைவாசம் புதிதல்ல. சிறைச்சாலைகள் அவருக்கு நூலகம் போல. அவ்வப்போது விசிட் அடிக்கத் தவறுவதில்லை அவர்.
முன்பு பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு 19 மாத சிறை வாழ்க்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். அதுதான் அவர் அதிக காலம் சிறையில் இருந்த காலமாகும். இப்போது மீண்டும் ஒரு சிறைவாசத்தை அவர் சந்தித்துள்ளார்.
பொடாவின் கீழ் அவரை சிறையில் அடைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பின்னர் விடுதலையாகி வந்த அவர் திமுக கூட்டணியில் இணைந்து அதிர வைத்தார். திமுகவில் இருந்து விலகிய அவர் திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்தார் வைகோ. வைகோவின் சிறைவாசங்கள் குறித்த ஒரு விறுவிறுப்பான பார்வை:

திருமங்கலம் பேச்சு
மதுரை திருமங்கலத்தில் 2002ஆம் ஆண்டு ஜூன் 29ஆம்தேதி மதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்றத்தில் விடுதலைப்புலிகளின் மீதான நிலைப்பாடு குறித்து சுப்பிரமணியன் சுவாமியின் கேள்விக்கு பதில் அளித்து பேசியது குறித்து விளக்கினார். அப்போது, ‘விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்' என்றார். கூட்டம் முடிந்ததும், அமெரிக்காவில் இருக்கும் தன் மகளை பார்க்கச் சென்றார் வைகோ.

9 பேர் மீது பொடா வழக்கு
அந்த நேரத்தில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, பூமிநாதன் உள்ளிட்ட 9 பேர் மீது ‘பொடா' சட்டத்தின்கீழ் க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஜூலை 11-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பிய வைகோவை, சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீஸார் கைது செய்தனர். அவரை திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கருணாநிதி சந்திப்பு
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது 2002 டிசம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. திமுக தலைவர் கருணாநிதி 2 முறை வேலூர் சிறைக்கு சென்று வைகோவை சந்தித்தார். இதற்கிடையே, வைகோவுடன் கைதான மற்ற 8 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து 2004-ஆம் ஆண்டு ஜாமீனில் விடுதலையாயினர்.

19 மாத சிறைவாசம்
ஜாமீன் மனு தாக்கல் செய்ய மாட்டேன் என்று வைகோ உறுதியாக இருந்தார். பின்னர், கருணாநிதி உள்ளிட்ட பலரின் வேண்டுகோளை ஏற்று, அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். சுமார் 19 மாத சிறை வாசத்துக்குப் பிறகு 2004 பிப்ரவரி 7ஆம் தேதி வைகோ விடுதலையானார். சிறையிலிருந்தபோது, சுமார் 47 ஆயிரம் கி.மீ. தூரம் பல நீதிமன்றங்களுக்கு போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்டதாக வைகோ கூறினார். வேலூர் சிறை வாசலில் இருந்து அவரை தாரை, தப்பட்டை முழங்க சுமார் 8 மணி நேரம் மதிமுகவினர் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

பொடா சட்டமே ரத்து
அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் வீட்டுக்கு செல்ல, 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி பெற்றார். அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், பொடா மறுசீராய்வுக் குழு தீவிர பரிசீலனை செய்து, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி, வழக்கை வாபஸ் பெற தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு
இதையடுத்து, 2004 ஆகஸ்டில் வழக்கை வாபஸ் பெறுவதாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வைகோ உள்ளிட்ட 9 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீர இளவரசன், பி.எஸ்.மணியம் ஆகியோர் இறந்துவிட்டனர்.

பொடா வழக்கு முடித்து வைப்பு
9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலையில் வைகோ மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற அறிவுரையின்பேரில் வைகோ உள்ளிட்ட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், மதிவாணன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்ச், வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கை ரத்து செய்து கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகலை இணைத்து கடந்த வெள்ளிக்கிழமை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ சார்ப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மோனி, பொடா வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இறையாண்மைக்கு எதிரான பேச்சு
கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வைகோ மற்றும் அப்போது மதிமுக அவைத் தலைவராக பதவி வகித்து தற்போது திமுகவில் உள்ள மு.கண்ணப்பன் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக கடந்த திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் மு.கண்ணப்பன் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. இதனால் வைகோ மீதான வழக்கு மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது.

8 ஆண்டு வழக்கில் விடுதலை
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கியூ பிரிவு போலீஸார் தரப்பில் 15 சாட்சிகள் மற்றும் 35 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வைகோவை விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிபதி கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டுகிறேன்
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் 'குற்றம் சாட்டுகிறேன்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.

பல வருட காலம்
இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் வெளியே வந்தார்.தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார்.

புழல் சிறையில் வைகோ
இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் தானாக முன் வந்து இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் வைகோ ஆஜரானார். ஜாமீனில் செல்ல விருப்பமில்லை என நீதிபதியுடம் வைகோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே வைகோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications