விருதுநகரில் தேர்தல் பணியை தொடங்கினார் வைகோ… தொழிலதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்!
சென்னை: மதிமுக பொது செயலாளர் வரும் லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவது உறுதியாகியுள்ளது.
மூன்றாம் கட்ட மறுமலர்ச்சிப் பயணத்தை விருதுநகர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட வைகோ, பொதுமக்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க மதிமுக தயாராகிவிட்டது. இதனையொட்டி மக்களைச் சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை மூன்று கட்டமாக நடத்தி முடித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
மூன்றாவது கட்டமாக விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்டார்.

சட்டமன்ற தொகுதிகள்
மூன்றாம் கட்ட மறுமலர்ச்சி பயணத்தில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு சென்றுஅவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களிடம் ஆதரவு
மூன்றாம் நாள் பயணத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் தலைவர் வைகோ அம்மாபேட்டையில் துவங்கி ஆலங்குளத்தில் நிறைவடைந்தது.

வழியெங்கும் மக்கள்
துரைசாமிபுரம் , இடையன்குளம் , மேட்டுப்பட்டி காக்கிவாடன்பட்டி, கான்சாபுரம் , மம்சாபுரம் , நதிக்குடி , ஆத்தூர் , திருவேங்கிடபுரம், கொங்கன்குளம் , புளிப்பாரைபட்டி, மாதாங்கோவில்பட்டி , கல்லம நாயக்கன்பட்டி வழியாக சென்று ஆலங்குளத்தில் நிறைவு செய்தார். ஆலங்குளத்தில் நடைபெற்ற நிறைவு பொது கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தொழிலதிபர்களுடன்
சிவகாசியில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை அவர் நேரில் சந்தித்து , தேர்தலில் தனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்.

சமுதாயத் தலைவர்கள்
இது தவிர விருதுநகர் லோக்சபா தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சமுதாயத் தலைவர்களையும் அவர் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார் என அவரது கட்சியினர் தெரிவித்தனர்.

தேர்தலுக்கு ரெடி
லோக்சபா தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்படா விட்டாலும், யாருடன் கூட்டணி என்று முடிவு செய்யாவிட்டாலும் தேர்தல் பணியை தனது தொகுதியில் தொடங்கிவிட்டார் வைகோ. இந்த முறை வைகோவை எப்படியாவது நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவிடவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர் அவரது கட்சியினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications