ஆளுநருடன் திடீர் சந்திப்பு- பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை: வைகோ
சென்னை: தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வைகோ இன்று வருகை தந்திருந்தார். அங்கு மருத்துவர்களிடம் ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
லண்டனில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட்டையும் வைகோ சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு 2 முறை வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்காக அவருக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.

பின்னர் திடீரென ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசகர் ராவை வைகோ சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆளுநர் வித்யாசகர் ராவ் என்னுடைய பழைய நண்பர். இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவுமே பேசவில்லை. முழுவதும் நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே.
தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை. 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது போரை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் போராடினோம். அப்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வராக இருந்த கருணாநிதி 45 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாரே.. அப்போது பொறுப்பு முதல்வர் கேள்வி எழவில்லையே.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications