மோடியும், அமித்ஷாவும் பாசிச பாதையில் செல்கின்றனர் : வைகோ - வீடியோ
விஷால் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு பெரும் பங்கு உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: கந்து வட்டி தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக வைகோ கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கந்து வட்டி தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளதாதகாவும், இதில் சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கந்து வட்டியை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்பட்டும், இன்னும் கந்துவட்டிப் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன என்றும் வைகோ கூறினார்.
விஷால் வீட்டில் சோதனை நடத்தியது பாசிச நடவடிக்கை என்று கூறிய வைகோ, இதுபோன்ற மிரட்டல் விடுப்பது விபரீதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications