காவிரியில் புதிய அணை - மீத்தேன்: தஞ்சையில் வைகோ போராட்டம் – கரூர், புதுகையிலும் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சையில் மீத்தேன் திட்டத்தினை எதிர்த்து கலால் வரி, சுங்க வரி அலுவலகங்களை முற்றுகையிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் கைதாகியுள்ளனர்.

வைகோ தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Vaiko protest against methane scheme…

காவிரியில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் திருவாரூர் தபால் நிலையம் எதிரேயும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதே போன்று, காவிரியில் புதிய அணைகட்டும் முயற்சியைக்கண்டித்தும்,டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும் காவிரி பாதுகாப்புக்குழு சார்பில் புதுக்கோட்டையில் மேலராஜவீதியில் உள்ள தலைமை ,தபால்நிலையத்தை இன்று காலையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

Vaiko protest against methane scheme…

இதில், திமுக சார்பில் வடக்கு மாவட்டச்செயலர் பெரியண்ணன் அரசு தலைமை யிலிலும், காங்கிரஸ் சார்பில் மாவட்டத்தலைவர் தி்.புஷ்பராஜ் தலைமையிலும், மதிமுக சார்பில் மாவட்டச்செயலர் க.சந்திரசேகரன் தலைமையிலும், திமுக முன்னாள் எம்எல்ஏ பே.மாரியய்யா தலைமையிலும் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற 4 பெண்கள் உள்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்

Vaiko protest against methane scheme…

மேலும், கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலை பகுதியில் கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி மணி தலைமையில், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், சங்கொலி மக்கள் தொடர்பாளர் நவபாரத் நாரயண ராஜா உள்ளிட்ட ஏராளமான ம.தி.மு.க வினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்த ஏராளமானோர் 50, 50 பேராக தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

Vaiko protest against methane scheme…

இப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிÞட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி, பேரழிவு எதிர்ப்பு இயக்கம், தமிழ்ப் புலிகள், விடுதலை தமிழ் புலிகள், விளிம்புநிலை மக்கள் விழிப்புணர்வு இயக்கம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழு, தமிழர் தேசிய விடுதலை அமைப்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தமிழகத்தில் காவிரி உரிமைக்குப் போராடும் இயக்கங்கள், தமிழ் இன உணர்வு அமைப்புகள், வணிகர் சங்கங்கள், மீனவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்து பத்தாயிரம் பேர் கைதாகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+