நேதாஜி மரணத்தில் உண்மைகளை வெளியிடக் கோரி மார்ச் 23-ல் போராட்டம்- லாலு,சரத் யாதவ் பங்கேற்பு: வைகோ
சென்னை: நேதாஜி மரணத்தில் உள்ள உண்மைகளை வெளியிடக் கோரி டெல்லியில் மார்ச் 23-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகளை தெளிவாக்கிவிட்டது என்றார்.
தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான வகையில் பொது பட்ஜெட் அமையும் எனவும் கருத்து கூறிய வைகோ, விமான நிலையத்தையும் தனியார் மயமாக்க அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

தேனி மக்களுடன்
நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க மேத்தா பட்கருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார். நியூட்ரினோ திட்டம் குறித்து மார்ச் 1ம் தேதி தேனியில் மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.
நிலஅபகரிப்பு
கார்ப்பரேட் நிறுவனங்களை திருப்திப் படுத்தவே நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று குறிப்பிட்ட வைகோ, இந்த சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றார்.
நேதாஜி உண்மைகள்
மேலும் அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் பற்றிய உண்மைகளை வெளியிட மோடி அரசு மறுக்கிறது. அவர் சித்ரவதை செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிடக் கோரி டெல்லியில் மார்ச் 23ஆம் தேதி போராட்டம் நடத்தப்போகிறோம். இந்த போராட்டத்தில் சரத்யாதவ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் வைகோ கூறினார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications