இல்லை.. இல்லை.. எனக்கு அந்த மாதிரி ஆசை இல்லை: ராஜ்யசபா சீட் குறித்து வைகோ
டெல்லி: பாஜக சார்பில் ராஜ்யசபா சீட் உங்களுக்கு வழங்கப்படவுள்ளதாமே என்ற கேள்விக்கு, இல்லை இல்லை எனக்கு அந்த மாதிரி ஆசை இல்லை. அதுகுறித்து நான் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசவும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள வைகோ அங்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார். அப்போது பாஜகவின் வெற்றிக்கு அவர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசினார். அவரது பேட்டியிலிருந்து...

இதயம் நிறைந்த வாழ்த்துகள்
நான் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தேன். சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் இப்படிப்பட்ட ஒரு மகத்தான வெற்றி, காங்கிரசை வீழ்த்தி எதிர்க்கட்சிக்கு கிடைத்தது இல்லை.

குப்பையில் தூக்கி வீசப்பட்ட காங்கிரஸ்
77ல் கூட இந்திராகாந்தி அம்மையார் தென்னிந்தியாவில் 150 இடங்களை பெற முடிந்தது. இப்போது 50 இடங்களை கூட பெற முடியாத அளவுக்கு குப்பை தொட்டியில் தூக்கி வீசப்பட்டு விட்டது காங்கிரஸ் கட்சி. எங்கள் இலக்கு நிறைவேறியிருக்கிறது.

துடைத்தெறியப்பட்டு விட்ட காங்கிரஸ்
ஈழத்தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் வஞ்சகமும், துரோகமும் செய்த காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

புதிய விடியலை மோடி தருவார்
நரேந்திர மோடி ஒரு மாபெரும் தலைவராக, புதிய விடியலை இந்தியாவுக்கு கொண்டு வருகின்ற அரசை நடத்துவார் என்று நம்பிக்கையோடு இந்திய மக்கள் அவருக்கு வெற்றியை தந்திருக்கிறார்கள்.

நான் சொன்னபடியே
நான் ராம்ஜெத்மலானி நடத்திய வழக்கறிஞர்கள் மாநாட்டில் குறிப்பிட்டேன், பாஜக 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் இரண்டு இலக்கத்துக்கு கீழேதான் வரும் என்று சொன்னேன். ஆமாம் சொன்னீர்கள் என்றார்.

வருத்தப்பட்டார் ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங், நான் தோற்றதற்கு மிக மிக வருத்தப்பட்டார். இந்த வெற்றியிலேயே நான் மகிழ்ச்சியடைய முடியாமல் நான் கவலைப்பட்டது நீங்கள் தோற்றது தான் என்றார். இல்லை, நான் போராட்டக்காரன். நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ராஜ்நாத் சிங் ஒரு திடமான முடிவு எடுக்கக் கூடிய தலைவர். அதனால்தான் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார் என்றார் வைகோ.

இல்லை.. அந்த மாதிரி ஆசை இல்லை
வேறு மாநிலத்தில் இருந்து உங்களை பாஜக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளதே என்று வைகோவிடம் கேட்டதற்கு, இல்லை... இல்லை... அந்த மாதிரி ஆசை எனக்கு இல்லை. அதுபற்றி நான் பேசவும் இல்லை என்று மறுத்து விட்டார் வைகோ.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications