மநகூ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிப்பா? மதிமுக திட்டவட்ட மறுப்பு!
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மதிமுக இதை திட்டவட்டமாக மறுத்தது.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து மதிமுக பொதுச்செயலர் வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மதிமுக இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. இதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார்.

சிபிஎம் முடிவு
3 தொகுதி தேர்தல் தொடர்பான ஆலோசனையின் போது போட்டியிட சிபிஎம் விரும்பியது. தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என சிபிஎம் கூறியிருந்தது. ஆனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ, 3 தொகுதி தேர்தலை மநகூ புறக்கணிப்பதாக அறிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள்
இதேபோல் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்த ஆலோசனையில் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறோம் என்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கூறியிருந்தது. ஆனாலும் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தை மநகூ புறக்கணிக்கிறது என வைகோ அறிவித்தார்.

ஸ்டாலினுக்கு கடிதம்?
இந்த விவரங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே வெளிப்படுத்தின. திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மீண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் அக்கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை இருப்பதாக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் அனுப்பினார்.

வைகோ விடுவிப்பு?
இதனிடையே மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் தேவை இல்லை என இடதுசாரிகள் முன்வைத்த கருத்தை மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஏற்றுக் கொண்டதாக அச்செய்திகள் தெரிவித்தன.

மதிமுக திட்டவட்ட மறுப்பு
ஆனால் மதிமுக இச்செய்தியை திட்டவட்டமாக தெரிவித்தது. நமது ஒன் இந்தியா தள நிருபருடன் பேசிய மதிமுகவின் இணையதள செய்தித் தொடர்பாளர் மின்னல், இச்செய்தி உண்மையானது அல்ல என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications