மதிமுக முடிவால் அதிர்ச்சி... நட்பு தொடரும் என கூறியிருப்பது ஆறுதலை தருகிறது : திருமாவளவன்
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூட்டணியில் உள்ள திருமாவளவன் மற்றும் முத்தரசன் ஆகியோர் தெரி
சென்னை : மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். வைகோவின் இந்த முடிவு நாகரீகமான ஒன்று என்றும் அவர் கூறினார்.இருப்பினும் கூட்டணிக்கட்சிகளுடனான நட்பு தொடரும் என வைகோ தெரிவித்திருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும் வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூறினார். கூட்டணி தலைவர்களை ஆலோசிக்காமல் வைகோ தனியாக முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications