பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் வைகோதான் - விஜயகாந்த் அல்ல..: தமிழருவி மணியன்
சென்னை: 2016 தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் வைகோதானே தவிர விஜயகாந்த் அல்ல என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இலங்கைத் தமிழின அழிப்புக்கு உதவிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழகத்தில் காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டும். திமுக, அதிமுகவிடமிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற நோக்கத்துக்காக பாஜக கூட்டணிக்கு பாடுபட்டேன். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. காங்கிரஸ் 37 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. திராவிடக் கட்சிகளில் ஒன்றை மக்களிடமிருந்து விலக்கி விட்டோம். இன்னொரு கட்சியான அதிமுகவுக்கு எதிராக கூட்டணி அமைத்து, 2016-ல் அதையும் படுதோல்வி அடைய வைப்போம்.
தமிழக மக்கள் பலன் பெற வேண்டுமென்றால், பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளராக வைகோவையே அறிவிக்க வேண்டும். அவரது ஒழுக்கம், நேர்மை, நாணயத்தை யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட கறைபடியாதவராக, களங்க மற்றவராக விஜயகாந்தைக் கூற முடியாது.
மத்திய அரசு பதவி
தமிழகத்தில் பாஜக அணியை உருவாக்கியதற்காக மத்திய அரசில் எனக்குபதவி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், அதை ஏற்கும் நிலையில் மணியன் இல்லை. அரசு சார்ந்த அதிகாரத்தில் இருக்க மாட்டேன் என்ற லட்சியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications