விலைவாசியை அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுக! - வைகோ
வைகோ: நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலைவாசி ஏற்றம் தொடர்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மேலும் விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும், ரூபாய் மதிப்பு சரிவையும் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி இருக்கின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவை சந்தித்தபோது வீழ்ச்சி விகிதத்திற்கு ஏற்ப மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலன் மக்களுக்கு போய் சேரவில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு உயர்த்தியது. 2014 நவம்பர் முதல் 2015 பிப்ரவரி வரை கலால் வரிகளை பெட்ரோலுக்கு ரூ 7.75ம், டீசலுக்கு ரூ 7.50ம் மத்திய அரசு உயர்த்தியது. பன்னாட்டு சந்தையில் இந்திய கொள்முதல் செய்யும் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 84.71 டாலராக இருந்தது. இதன் விலை தற்போது 59 டாலராக குறைந்திருக்கிறது.
பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பெட்ரோல் விலை 12 முறையும், டீசல் விலை 8 முறையும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பெட்ரோல் விலையில் ரூ 18.40ம், டீசல் விலையில் ரூ 15.47ம் குறைந்தது என்றாலும், மூன்று முறை அறிவிக்கப்பட்ட விலை உயர்வால் பெட்ரோல் விலை ரூ 7.96 ஆகவும், டீசல் விலை ரூ 6.07 ஆகவும் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
எனவே பா.ஜ.க அரசு பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏறபவே பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்வதாகக் கூறுவதை ஏற்க முடியாது.
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலைவாசி ஏற்றம் தொடர்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மேலும் விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications