For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை பிரச்சனை, ஜல்லிக்கட்டுக்கு தடை விவகாரத்தில் இரட்டை வேடம் - மத்திய அரசு மீது வைகோ பாய்ச்சல்

Google Oneindia Tamil News

நெல்லை: இலங்கை பிரச்சனை மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது பேட்டியில், "வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று மதுரையில் மக்கள் நல கூட்டணி இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டில் சட்டமன்ற தேர்தலில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து தீர்மானிக்க உள்ளோம்.

Vaiko speaks about Jallikkattu in Nellai

மக்கள் நல கூட்டணி தமிழ்நாட்டில் திருப்பு முனையை ஏற்படுத்தும். மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் இணைந்து கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறோம். பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். இப்படிப்பட்ட கூட்டணி தமிழகத்தில் இதுவரை அமைந்ததில்லை. தமிழகத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள். டாஸ்மாக்கை மூடாததால் இந்த அரசு கோடிக்கணக்கான தாய்மார்கள் கோபத்துடனும், வேதனையுடனும் இருக்கிறார்கள்.

வரும் தேர்தலில் அவர்கள் அந்த கோபத்தை வெளிப்டுத்துவார்கள். டாஸ்மாக் கடைக்கு எதிராக இதுவரை எத்தனையோ போராட்டங்கல் நடந்துள்ளன. டாஸ்மாக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். சசிபெருமாள் மரணத்துக்கு இந்த அரசுதான் காரணம். இது ஓரு கொலைகார அரசு. மது ஓழிப்பும், ஊழல் ஓழிப்பும் தான் எங்களது முதல் கொள்கை.

மது ஓழிப்பு, ஊழல் ஓழிப்பு போராட்டத்துக்கு எங்களது இந்த போராட்டத்துக்கு வரும் தேர்தலில் விடை கிடைக்கும். இலங்கை பிரச்சனையிலும், ஜல்லிககட்டு பிரச்சனையிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து விட்டது. மக்கள் நல கூட்டணியில் சேருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்ததற்கு இதுவரை பதில் வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Vaiko says in an interview that, central govt made double play in Jallikkatu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X