"ஏமாற்றிய ஜெ. அரசு.. வஞ்சித்த கருணாநிதி அரசு... கைகொடுக்கும் மக்கள் நல கூட்டணி அரசு”- ஈரோட்டில் வைகோ
ஈரோடு: ஈரோடு, கோபிச் செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ நான் கள்ளத்தோணி என்பது பிரச்சாரத்திற்கு அழைத்தபோது தெரியவில்லையா என்று காங்கிரசினை சாடியுள்ளார். மேலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகளையும் தாக்கி உரையாற்றினார்.
வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நேற்றிரவு நடந்தது. அதில் உரையாற்றிய அவர், "ஒரு பத்திரிகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கள்ளத்தோணி வைகோ என்று கூறியுள்ளார். இங்கே நான் அவருக்கு பதில் கூற வந்துள்ளேன்.

2004 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் என்னை பிரச்சாரத்துக்கு கோபிக்கு அழைத்தீர்களே அப்போது நான் கள்ளத்தோணி என்பது தெரியவில்லையா? நான் நேரடியாக உங்களை கேட்கிறேன். எந்த அடிப்படையில் நீங்கள் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தீர்கள். சுயமரியாதையும், மானமும், ரோஷமும் காங்கிரஸ்காரர்களுக்கு என்றுமே கிடையாதா?
எந்த அடிப்படையில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தீர்கள் என்பதற்கு மக்களுக்கு நீங்கள் விளக்கம் தர வேண்டும். அ.தி.மு.கவினர் பட்ட பகல் கொள்ளைக்காரர்கள். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஒரு கல்வியாண்டில் சமஸ்கிருத மொழியை மூன்றாவது மொழியாக திணிக்கப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதைவிட அக்கிரமம் எதுவும் இருக்க முடியாது. நான் நேற்று வரை அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை.
கோபியில் இருந்து 15 லட்சம் அரசு ஊழியர்களை கேட்கிறேன். உங்களை ஏமாற்றியது ஜெயலலிதா அரசு. ஆனால், உங்களை வஞ்சித்தது கருணாநிதி அரசு என்பதை மறந்து விடாதீர்கள். எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். உங்கள் கோரிக்கைகளை பாரபட்சமின்றி தீர்த்து தருகிறோம்" என்று பேசினார்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications