அடையாளம் மாறிய வைகோ: கல்லூரி கலைவிழாவில் பேச்சு
மதுரை: ஒரு நாடு முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கல்வி நிறுவனங்களில் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில், கல்லூரி கலை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சேவியர் வேதம் தலைமை தாங்கினார். துணை முதல்வர் காட்வீன் ரூபஸ் வரவேற்றார்.
விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்களுக்குச் சொந்தம்
இயல், இசை, நாடகம் இவை மூன்று கலைகளும் தமிழர்களுக்குச் சொந்தமானவை. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகி மாதவி வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இவை தோன்றின.

விளையாட்டுக்கு முக்கியத்துவம்
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது விளையாட்டுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் கண்டால், அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக பலம் வாய்ந்தவர்களாக காணப்படுவார்கள். இதனால் வேற்றுமை களையப்பட்டு ஒற்றுமை ஓங்கும்.

தமிழர்களுக்கு குடியுரிமை
ஆடை நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். அப்படிப்பட்ட தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் இரக்கமின்றி நிர்வாணப்படுத்தி படுகொலை செய்தனர். தமிழர்கள் பிழைப்பிற்காக இலங்கைக்கு வந்தவர்கள். அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க வேண்டுமென்று சிங்கள அரசு கூறிவருகிறது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களில் பலர் பூர்வீக குடிமக்கள்.

மறைக்கும் சிங்கள அரசு
சிலர் மட்டும் ஆங்கிலேயர்கள் காலத்தில் வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இதை சிங்கள அரசு மறைத்து அங்கு வாழும் தமிழர்களின் குடியுரிமையை வழங்க மறுத்து வருகிறது இவ்வாறு வைகோ பேசினார்.

மாறிய வைகோ
வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி, கறுப்புத் துண்டு என எப்போதும் காணப்படும் வைகோ இந்த நிகழ்ச்சிக்காக கோட் சூட் அணிந்து கல்லூரி பேராசிரியர் போல நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பிரசாத், இணை முதல்வர் கஸ்மீர்ராஜ், துணை முதல்வர் ஜசன்ஜோசப், கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி முனைவர் ஜோசப் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications