ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வயது வரம்பை குறைப்பதா?: வைகோ
சென்னை: அகில இந்திய குடிமைப்பணிக்காக இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவித்துள்ள வயது வரம்பினை கைவிட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற முக்கிய நிர்வாகப்பணிகளுக்கு மத்திய தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பை மத்திய அரசு குறைத்து அறிவித்ததோடு, அதனை வரும் 2015 ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்போவதாகவும் முடிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது ஆகும்.
இன்றுவரை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வயது வரம்பு என்னவென்றால், பட்டியல் சாதி வகுப்பினரான தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 21 வயது முதல் 35 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நடைமுறையை மாற்றி, இனிமேல் 29 வயது வரைதான் தேர்வு எழுத முடியும் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 21 வயது முதல் 33 வயது வரை தேர்வு எழுதலாம் என்று இருந்த நிலையை மாற்றி 28 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும், பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 30 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நிலையை மாற்றி, 25 வயது வரைதான் தேர்வு எழுதலாம் என்றும் மத்திய அரசு முடிவு செய்து, இதனை வரும் 2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்போவதாக மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்திருக்கிறார்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அமைத்த இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தனது பத்தாவது அறிக்கையில் இவ்விதம் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகள் எழுதுகின்றவர்களின் வயது வரம்பை குறைத்து அறிக்கை தந்தது. அது மிக மிக தவறான அணுகுமுறையாகும்.
மிகுந்த ஈடுபாட்டுடன் இரவு பகலாகப்படித்து, கடுமையாக உழைத்து தேர்வுக்கு தங்களை தயார் செய்துகொண்டு தேர்வு எழுதுகையில், தேர்வு பெறாமலும் அல்லது நேர்காணலில் வெற்றி பெறாமலும் வாய்ப்பு இழக்கும்போது மீண்டும் மீண்டும் முயன்று தேர்வில் வெற்றி பெறுவதற்கு இதுவரை இருந்த வயது வரம்பு பெரிதும் உதவியது.
குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து இந்தத்தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பயன்பெற்றனர்.சமூக நீதி கொள்கைக்கு மாறாகவும், கடுமையாக உழைத்து முயலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் விதத்திலும் தற்போது குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு அமைந்துள்ளது.
எனவே இதுவரை அனுமதிக்கப்பட்ட வயது வரம்பே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தற்போது அறிவித்துள்ள வயது வரம்பினை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications