குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த முடிவை கைவிடுக: வைகோ
சென்னை: குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை மே 13 ஆம் தேதி, ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

குடும்பப் பாரம்பரிய தொழில்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பெற்றோர்கள் சட்டபூர்வ உரிமையாகக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருவது, ராஜாஜி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குலக்கல்வித் திட்டத்தைத்தான் நினைவூட்டுகிறது. ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போர்க்கோலம் பூண்டதன் விளைவாக, ராஜாஜி முதல்வர் பதவியை விட்டு வெளியேறியதும், பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றதும் வரலாற்றில் மறக்க முடியாதவை.
பா.ஜ.க. அரசு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஊக்கம் தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவதை தடை செய்வதும், குழந்தைத் தொழிலாளர் சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த தண்டனையை மூன்று ஆண்டுகாலம் உயர்த்தவும், தண்டத் தொகையை 50 ஆயிரம் வரை அதிகரிக்கவும், உத்தேச சட்டத் திருத்தம் வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.
குழந்தைத் தொழிலாளர் முறைக்கு சட்டபூர்வ அனுமதி அளித்துவிட்டு, சில தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு தடை என்பதும், சிறைத்தண்டனை, தண்டத்தொகை அதிகரிப்பு என்று சட்டத் திருத்தம் கொண்டு வருவதில் எந்தப் பயனும் இருக்காது.
இதுமட்டுமின்றி, தற்போது கொண்டுவரப்படும் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், 2010 இல் நடைமுறைக்கு வந்த, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு முரண் ஆனதாக இருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை கட்டாயக் கல்வி அளிக்க பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துவதை இந்தச் சட்டத்திருத்தங்கள் நீர்த்துப்போகச் செய்துவிடும்.
மக்களின் சமூகப் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டுதான் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்து இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மத்திய அரசு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications