ஒன்றல்ல, இரண்டல்ல, 1,08000 லட்டுகள்.. திருப்பூரில் தயாரிப்பு தீவிரம்.. வைகுண்ட ஏகாதசிக்காக
Recommended Video
திருப்பூர்: வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி அமைப்பு சார்பில் திருப்பூரில் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது.
நாளை, திங்கட்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். இந்நாளில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தால், பெருமாள் பாதத்தில் சேர்ந்து, மறுபிறப்பு இருக்காது என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

இந்த விழாவையொட்டி திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீவாரி அமைப்பு சார்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றும், நாளையும் லட்டு தயாரிக்கும் பணி முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடைபெற உள்ளது. இதற்கு ஸ்ரீவாரி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த லட்டுகள் அனைத்தும் திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் பிரசித்தி பெற்றது. அதே பாணியில், வீரராகவ பெருமாள் கோவிலிலும் லட்டு வழங்க ஏற்பாடுகள நடந்து வருகின்றன.
இது போன்ற ஆன்மீக சேவையை 12 வருடங்களாக ஏற்பாடு செய்து கொடுத்த ஸ்ரீவாரி அமைப்பினருக்கு பெண்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications