நெஞ்சை பதற வைக்கும் கோவை விபத்து.. அதிர வைக்கும் சிசிடிவி பதிவு வெளியானது!
6 பேரை கொன்ற ஆடி காரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றனர்.
Recommended Video

கோவை: கோவையில் இன்று நடந்த கொடூரமான சாலை விபத்து நகரையே உலுக்கி விட்டது.
ஆடி கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்த கோர விபத்து நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவில் சாலையோரம் நின்றிருந்த இருந்த அப்பாவி பொதுமக்கள் மீது கார் படு வேகமாக வந்த மோதும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அந்தக் காட்சிகளின் அடிப்படையில், காரை ஓட்டி வந்தது யார், காரின் உரிமையாளர் யார், என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளன. இந்த ஆடி கார் கோவை ரத்தினம் என்ற தனியார் கல்லூரி உரிமையாளரின் கார் என்பதும் அதன் டிரைவர் ஜெகதீசன் என்பதும் தெரியவந்துள்ளது. காரை ஓட்டி வந்த நபரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர்.
வாகனத்தை ஓட்டி வந்த ஜெகதீசன் மதுபோதையில் இருந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் ஜெகதீசனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சிலரும் தெரிவித்துள்ளனர். எனினும் இதன் முழு உண்மை நிலவரங்கள் போலீசாரின் விசாரணையின் இறுதியிலேயே தெரியவரும்
இந்த வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications