தேவதாசி... வகுப்பெடுத்த வைரமுத்து.. ஈடுகொடுக்க முடியாமல் அநாகரிகத்துக்கு தாவிய பாஜக கல்யாணராமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வைரமுத்துவிடம் தொலைபேசியில் பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன்- வீடியோ

  சென்னை: ஆண்டாள் குறித்த கருத்து மீதான தமது விமர்சனத்தை தெரிவிக்க போன் செய்த பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு தேவதாசி எனும் சொல் எப்படியெல்லாம் உயர்வானது என வகுப்பெடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து. இதனால் வைரமுத்து பேசாத ஒரு கருத்தை முன்வைத்து அநாகரிகமாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் உரையாடினார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

  ஆண்டாள் தொடர்பான வைரமுத்துவின் கருத்தை இழிவான சொற்களால் விமர்சித்திருக்கிறார் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா. இதே போல் பாஜகவை சேர்ந்தவர் என கூறிக் கொள்ளும் கல்யாணராமன் என்பவரும் போனில் வைரமுத்துவிடம் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

  Vairamuthu's view on Devadasi

  அதில், தம்மை விமர்சிக்க போன் செய்த கல்யாணராமனிடம் மிகவும் பொறுமையாகவே, தேவதாசி என்பது எப்படியெல்லாம் உயர்வானது; அந்த சொல் நில உடைமைச் சமூகத்தில் இழிவானதானது என சில நிமிடங்கள் வரலாற்று வகுப்பு எடுத்துள்ளார். இந்த நியாயத்தை தாமும் ஏற்பதாக கூறிவிட்டு சட்டென அநாகரிக உரையாடலுக்கு தாவுகிறார் கல்யாணராமன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Lyricist Vairamuthu has taught a lesson to BJP's Kalyanaram on the system of Devadasi,

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X