தேசிய கீதமும் தமிழ்த் தாய் வாழ்த்தும் சம அளவில் மதிக்கப்பட வேண்டியவை... வைரமுத்து
தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சம அளவில் மதிக்கப்பட வேண்டியவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எழுந்திருக்காதது சர்ச்சைக்குரியதாகியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சம அளவில் மதிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அப்போது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் அவர் காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழா முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கீ.வீரமணி டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்துவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது
— வைரமுத்து (@vairamuthu) January 24, 2018
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது
இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது.
இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை என்று வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்டதாக அவருக்கு எதிராக கருத்துகளை பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications