பார்க்காமலே விமர்சனம் செய்த வைரமுத்து... இப்ப சொல்லுங்க... எப்படி இருந்தது ரஜினியின் கபாலி?
சென்னை: கபாலியை பார்க்காமலேயே விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜவுடன் முதல் முறையாக கபாலி படத்தை பார்த்துள்ளார்.
கபாலி தோல்விப் படம் என வைரமுத்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கபாலி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வைரமுத்து இப்படி பேசுவதாக கபாலி படத் தயாரிப்பாளர் தாணு பதிலடி கொடுத்திருந்தார்.

கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்திருந்தனர். அதேநேரத்தில் சமூக வலைதளங்களிலும் வைரமுத்துக்கு எதிராக கடும் எதிர்ப்புகளையும் பதிவு செய்திருந்தனர் ரஜினி ரசிகர்கள்.
இதையடுத்து இச்சர்ச்சை குறித்து வைரமுத்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில் என் நோக்கம் நான் சார்ந்திருக்கும் திரையுலகை நான் பெரிதும் நேசிக்கும் ரஜினியைத் திட்டமிட்டுக் குறைத்துச் சொல்வதல்ல. என் நெஞ்சு தூய்மையானது; கபாலி வெற்றி தோல்வின்னு பேச நினைத்தேன் ஒரு வார்த்தை அதற்கு வசப்படாமல் போயிருக்கலாம்...அதை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், 'நான் 'கபாலி' படத்தை பார்க்கணும்' என்று ரஜினியிடம், வைரமுத்து போனில் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நுங்கம்பாக்கம் ஃப்ரிவ்யூ தியேட்டரில் முதல்முறையாக கபாலி படம் பார்த்தார் வைரமுத்து. இவ்வளவு சர்ச்சைக்கு அப்புறமும் அவர் சிரித்தபடி படம் பார்த்தாராம். அவருடன் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் படம் பார்த்தார்.
முன்னதாக தாணு கூறுகையில், கபாலியை தோல்விப் படம் எனும் இவர்தான், அந்தப் படத்துக்கு முதல் நாளில் 4000 டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றார். ஒரு நயா பைசா நான் வாங்கவில்லை... யார் என்ன சொன்னாலும் கபாலி வெற்றியைத் தடுக்க முடிந்ததா.. அது மாபெரும் வெற்றிப் படம். மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி என்று கூறியிருந்தார். தற்போது வேறு வழியின்றி அந்த பணத்தைத் தந்தாராம் வைரமுத்து.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications