For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடர் கொண்ட சிங்கமே பேசு- கருணாநிதிக்கு வைரமுத்து உருக்கமான கவிதை

பிடர் கொண்ட சிங்கமே பேசு என்று கருணாநிதிக்கு வைரமுத்து உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதிக்கு வைரமுத்து உருக்கமான கவிதை-வீடியோ

    சென்னை: பிடர் கொண்ட சிங்கமே பேசு என்று கருணாநிதி குறித்து வைரமுத்து உருக்கமான கவிதையை எழுதி அவர் முன்பு படித்துக் காட்டினார்.

    கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கொள்ளு பேரனுடன் கிரிக்கெட் விளையாடி வீடியோ வெளியானது அடுத்து தொண்டர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    இந்நிலையில் அவர் எப்போதும் உடன்பிறப்புகளே என்று அழைப்பார் என்று தொண்டர்கள் காத்துகிடக்கின்றனர். இதனிடையே, கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு உருக்கமான கவிதையை எழுதி அதை அவரிடம் படித்து காட்டியுள்ளார்.

    Vairamuthu writes poem for Karunanidhi

    அவர் எழுதிய கடிதம்:

    பிடர் கொண்ட சிங்கமே பேசு

    இடர்கொண்ட தமிழ்நாட்டின்

    இன்னல்கள் தீருதற்கும்

    படர்கின்ற பழைமை வாதம்

    பசையற்றுப் போவதற்கும்

    சுடர் கொண்ட தமிழைக் கொண்டு

    சூள் கொண்ட கருத்துரைக்கப்

    பிடர் கொண்ட சிங்கமே

    நீ பேசுவாய் வாய் திறந்து

    யாதொன்றும் கேட்கமாட்டேன்

    யாழிசை கேட்கமாட்டேன்

    வேதங்கள் கேட்கமாட்டேன்

    வேய்க்குழல் கேட்கமாட்டேன்

    தீதொன்று தமிழுக் கென்றால்

    தீக்கனல் போலெழும்பும்

    கோதற்ற கலைஞரே

    நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்

    இடர்கொண்ட தமிழர் நாட்டின்

    இன்னல்கள் தீருதற்கும்

    படர்கின்ற பழைமை வாதம்

    பசையற்றுப் போவதற்கும்

    சுடர் கொண்ட தமிழைக் கொண்டு

    சூள் கொண்ட கருத்துரைக்கப்

    பிடர் கொண்ட சிங்கமே

    நீ பேசுவாய் வாய் திறந்து...

    என்று வைரமுத்து கருணாநிதிக்கு கவிதை எழுதியுள்ளார்.

    English summary
    Vairamuthu writes poem for Karunanidhi and reads before him in Gopalapuram house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X