சாமியார் கண்ணன் வாக்குமூலம் எதிரொலி: துரைராஜ்–டிரைவர் கொலை வழக்கிலும் யமுனா கைது

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைர வியாபாரி தங்கவேல், மகன் செல்வகுமார், மகள் சத்யா ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் தொடர்புள்ளதாக, தங்கவேலுவின் மனைவியும் சாமியார் கண்ணனின் கள்ளக்காதலியுமான யமுனாவைவும், அவரது தயாரையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் வைர வியாபாரி தங்கவேல், மற்றும் செல்வக்குமார், சத்யா ஆகிய 3 பேரை கொலை செய்ய உடந்தையாக இருந்தது. தடையங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சாமியார் கண்ணனிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் கடந்த 3 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது 5 பேரையும் நான் தான் கொலை செய்தேன் என்றும், அனைத்து கொலைகளையும் யமுனா மீதான ஆசையில் செய்ததாகவும் கூறினார். மேலும் இந்த கொலைகள் செய்த போது யமுனாவும் உடன் இருந்ததாக வாக்கு மூலத்தில் கூறினார்.
இதை தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலதிபர் துரைராஜ், மற்றும் டிரைவர் சக்திவேல் ஆகியோர் கொலை வழக்குகளிலும் யமுனாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேர்த்தனர்.
இந்த வழக்கில் யமுனாவை கைது செய்ததற்கான பிடிவாரண்ட் உத்தரவை திருச்சி பெண்கள் சிறையில் உள்ள யமுனாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றனர். சிறை அதிகாரிகளுக்கும் கடிதம் கொடுத்தனர்.
திருச்சி சிறையில் கடந்த 5 நாட்களாக யமுனா தனது தாய் சீதாலெட்சுமியுடன் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சக கைதிகளிடம் யமுனாவும், சீதாலெட்சுமியும் அமைதியாக உள்ளனர்.
கொலைகள் செய்தது குறித்தோ, தனது குடும்பம் அழிந்தது குறித்தோ இருவரும் வெளியில் கவலையை காட்டிக் கொள்ளவில்லை. கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு அமைதியாக சிறையில் உள்ளனர்.
போலீசாரிடம் கணவர் மற்றும் மகன், மகளை கொன்றதாகவும் அதிலும் சாமியார் கண்ணன் தான் அவர்களை அடித்துக் கொன்றார் என்றும் கூறி வந்த யமுனாவிற்கு சாமியார் கண்ணன் துரைராஜ், சக்திவேல் ஆகியோர் கொலைகளையும் ஒப்புக் கொண்டு தன்னையும் அதில் தொடர்புப்படுத்தியதும் அனைத்தையும் தனக்காகவே செய்தேன் என்று போலீசாரிடம் வாக்கு மூலத்தில் கூறியது தெரிய வந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்.
3 நாள் விசாரணையில் சாமியார் கண்ணன் 5 பேரை மட்டுமே கொலை செய்துள்ளேன், வேறு யார் கொலையிலும் தொடர்பு கிடையாது என தெரிவித்துள்ளார். யமுனாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது 5 கொலை மட்டும் நடந்ததா அல்லது சாமியார் கண்ணன் மற்ற கொலைகளை மறைக்கிறாரா என்ற உண்மை தெரியவரும் என போலீசார் கூறினர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications