இன்றோடு பிக்பாஸிலிருந்து வெளியேறுகிறாரா வையாபுரி.. பரபரபக்க வைக்கும் ஆடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி இன்று திட்டமிட்டபடியே வெளியேறக் கூடும் என்பதை அவரது மனைவி பெயரில் உலா வரும் ஆடியோ அம்பலப்படுத்தி உள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சர்ச்சைகள்தான். சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சேரி பிஹேவியர்

சேரி பிஹேவியர்

இதன் உச்சமாக சேரி பிஹேவியர் என வக்கிரத்தைக் கொட்டினார் காயத்ரி ரகுராம். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கமலின் சர்ச்சை பேட்டி

கமலின் சர்ச்சை பேட்டி

இதைத் தொடர்ந்து விளக்கமளித்த கமல்ஹாசனின் ஆணவ பேட்டியும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது வையாபுரியா? ஜூலியா? ஆர்த்தியா? என்கிற ட்விட்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

வையாபுரி வெளியேற்றம்?

வையாபுரி வெளியேற்றம்?

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரிதான் வெளியேறக் கூடும். சமூக வலைதளங்களில் வையாபுரியின் மனைவியின் குரல் என்கிற பெயரில் ஒரு ஆடியோ பரவி வருகிறது.

எலிமினேட் ஆகிடுவேன்..

அதில், நிறைய வேலைகள் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் அல்லது 2 வாரத்தில் எலிமினேட் ஆகிடுவேன்னு சொல்லிவிட்டுதான் வையாபுரி போனார் என்கிற தகவல் இடம்பெற்றிருக்கிறது. அதனால் நிச்சயம் வையாபுரி திட்டமிட்டபடியே இன்று வெளியேறிவிடுவார் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Vaiyapuri will eliminate from the Kamal Haasan's Bigg Boss Tamil on today.
Please Wait while comments are loading...