ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றார் ஸ்ரீரங்கம் வளர்மதி
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவின் எஸ். வளர்மதி சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதற்காக கார் மூலம் நேற்று இரவு சென்னை விரைந்தார். போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்ற அவர் அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்து தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜெயலலிதாவிடம் வழங்கி ஆசி பெற்றார்.

இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த நிகழ்வின் போது, திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அதிமுக மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினரும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளருமான ப.குமார் எம்.பி., திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான ஆர்.மனோகரன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications