For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக பாஜக தலைவராகிறார் வானதி சீனிவாசன்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் வானதி சீனிவாசன் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன், கனரக தொழில்கள் துறை இணை அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

வானதி சீனிவாசன்?

வானதி சீனிவாசன்?

லோக்சபா தேர்தலில் எப்படியும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த வானதி சீனிவாசனையே தமிழக பாஜக தலைவராக நியமிக்கலாம் என்று பெரும்பான்மையோர் கருத்து தெரிவிக்கின்றனராம்.

பொன்னார் ஆதரவு

பொன்னார் ஆதரவு

இதற்கு பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் ஆகியோரும் ஆதரவு தெரிவிக்கின்றனராம்.

முயற்சிக்கும் ஹெச். ராஜா

முயற்சிக்கும் ஹெச். ராஜா

ஆனால் ஹெச். ராஜாவோ தம்மை பாஜக தலைவராக்க வேண்டும் என்பதில் லாபியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தடாலடி ராஜா

தடாலடி ராஜா

ஹெச். ராஜா சர்ச்சைக்குரிய வகையில் தடலாடியாக கருத்துகளைத் தெரிவிப்பவர் என்பதால் அவரை ஆதரிப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறதாம்.

தமிழிசை செளந்தரராஜனும்..

தமிழிசை செளந்தரராஜனும்..

மேலும் தமிழிசை செளந்தரராஜனும் இந்த தலைவர் பதவிக்கான போட்டியில் குதித்துள்ளதாக தெரிகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

விரைவில் தமிழக பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.

English summary
Union Minister Pon Radhakrishnan & Muralidhara Rao back Vanathi Srinivasan as next TN BJP President, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X