மோடி கூட்டத்திற்கு தொண்டர்களைக் கூட்டி வருகிறார்களாம்..யார் சொன்னா?... வானதியே சொல்லிட்டார்!
சென்னை: கோவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டத்திற்குத் தொண்டர்களைத் திரட்டுவதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தனது பேஸ்புக்கில் போட்டிருந்த செய்தி மற்றும் படங்களுக்கு, பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று சிலர் கமெண்ட் போட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பாஜகவின் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தையும் இன்று மோடி தொடங்கி வைப்பதால் பாஜகவினர் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. இந்த நிலையில் வானதி சீனிவாசன் தனது பேஸ்புக்கில் போட்டிருந்த புகைப்படங்கள் கவனம் ஈர்ப்பதாக உள்ளன.

மோடி வருகை
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் இன்றைய மோடி விஜயத்தை தனக்குச் சாதமாக்கிக் கொள்ள வேகம் காட்டி வருகிறது பாஜக.

பிரசாரத் தொடக்கம்
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத் தொடக்கமாக இதை பாஜக வர்ணித்து வருகிறது. எனவே கோவையில் மாஸ் கெட்ட மெனக்கெடல்களில் அது ஈடுபட்டுள்ளது.

ஆள் திரட்டும் பணி
இந்த நிலையில் இந்தக் கூட்டத்திற்கு பல பகுதிகளிலிருந்தும் ஆட்களைத் திரட்டி வருவதை அக்கட்சியினரே பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

வானதி சீனிவாசன்
இந்த நிலையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மோடி கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்டி வருவது தொடர்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

தானாக வரவில்லையோ!
இதைப் பார்த்து சிலர் கமெண்ட் போட்டுள்ளனர். அதில் Gopinath Manoharan என்பவர், மோடிஜி வருகையை முன்னிட்டு தாங்கள் அனைவரும் கட்சி தொண்டர்கள், கட்சி அலுவலகங்களை மட்டுமே சந்தித்து இருகிறீர்கள் . பொது இடங்களில் கான முடியவில்லை . இருப்பினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் என்று கருத்திட்டுள்ளார்.

ஏதாவது செய்திருந்தால்
Kongunadan Kongunadan என்பவர் போட்டுள்ள கருத்தில், அம்மணி.. கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலான தனது ஆட்சியில் " வளர்ச்சி நாயகன் " நாட்டின் ஒட்டு மொத்த பாமர மக்களின் நலனில், அவர்களது சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் இம்மியளவேனும் " வளர்ச்சி ' யை நகர்த்த உண்மையான அக்கறையைக் காட்டியிருந்தால், தேவையான முயற்சியை மேற்கொண்டிருந்தால், நீங்களெல்லாம் இந்தளவிற்கு மெனக்கெடத் தேவையில்லை. பிரதமர் வருகிறார் என்றால் அவரால் பயனடைந்த மக்கள் தாமாக வந்து அவரைக் காண, நன்றி சொல்ல அலை, அலையாய் வர மாட்டார்களா என்ன? அவர்தான் மேல்தட்டு வர்க்கத்தின் பிரதமராக அல்லவா செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார். இயல்பு நிலை இல்லாத போதுதான் திரட்ட வேண்டி வரும். உங்கள் திரட்டும் பணி எதனைக் காட்டுகிறது? புரியும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications