விவசாயிகள் எதிர்ப்பு.... வண்டலூர் பேருந்து நிலையம் ஊரப்பாக்கத்திற்கு இடம் மாறுகிறது?
சென்னை: விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து வண்டலூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புறநகர் பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வண்டலூரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.

ஆனால், அரசின் இந்த முடிவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அரசு தேர்வு செய்திருந்த இடம் விவசாய நிலம் ஆகும். அந்த இடத்தில் தற்போதும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்நிலையில், வண்டலூர் புறநகர் பேருந்து நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அருகே ஊரப்பாக்கத்தில் தனியாரிடம் இருந்து இடம் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications