Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நள்ளிரவில் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை... நடந்தது இதுதானாம்! வாணி ராணி நடிகை விளக்கம்!

பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை காரணமாகவே தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளருடன் சண்டையிட்டதாக சின்னத்திரை நடிகை சபீதா ராய் விளக்கமளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளர் சுகுமாறன் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாலேயே நள்ளிரவில் சண்டையிட நேரிட்டதாக சீரியல் நடிகை சபீதா ராய் தெரிவித்துள்ளார்.

வாணி ராணி டிவி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வரும் நடிகை சபீதா ராய் நள்ளிரவில் ராடன் மீடியா நிறுவன மேலாளர் சுகுமாறனுடன் குடுமிப்பிடி சண்டையிட்டது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 27ம் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள சுகுமாறன் வீட்டு வாசலில் நடிகை சபீதா ராயும், சுகுமாறனும் வாக்குவாததத்தில் ஈடுபட்டு இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கள்ளக்காதல் விவகாரத்தால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 பணத்தால் பிரச்னை

பணத்தால் பிரச்னை

சுகுமாறனின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியதாகவும், பணத்தகராறு ஏற்பட்டதையடுத்து சுகுமாறன் சபீதாவை வெளியேற்றியதையடுத்து மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தத் தகவல்களை மறுத்துள்ள நடிகை சபீதா ராய், சுகுமாறன் தனக்கு தந்தை போன்றவர் என்றும், தான் கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தரக் கேட்ட போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தமிழ் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

 சித்தரிக்கப்பட்ட வீடியோ

சித்தரிக்கப்பட்ட வீடியோ

தாங்கள் சண்டையிட்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதில் சில பகுதிகளை எடிட் செய்து சுகுமாறனின் வீட்டருகே வசிக்கும் சில வெளியிட்ட விஷம வீடியோவால் தனது வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் கதறுகிறார் சபீதா. தனக்கு 4 மாதத்தில் திருமணமாக உள்ள நிலையில் ஊடகங்களில் வெளியான செய்தியால் மிகுந்த மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் உண்மையை நிரூபிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

 தந்தை, மகள் உறவு `

தந்தை, மகள் உறவு `

பணத்தை தருவதாக சுகுமாறன் ஒப்பு கொண்டதாகவும் தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ள சபீதா, தாங்கள் இருவரும் சமாதானம் அடைந்து விட்டதாகவும் கூறுகிறார். சண்டை வீடியோ வெளியானதால் தனது திரைத்துறை வாழ்வு பாதிக்கப்கட்டுள்ளதோடு, ராடன் மீடியா நிறுவனமும் பணிநீக்கம் செய்து விட்டதால் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாக கலங்குகிறார் சபீதா.

 அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

சபீதாவும், சுகுமாறனும் ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு சுகுமாறன் சபீதாவை முடியை பிடித்து அடித்த அடியை பார்ப்பவர்களுக்கே மனம் அதிர்ச்சியை அளிக்கும். அப்படி இருக்கும் போது எப்படி சமாதானம் ஆனீர்கள் எனக் கேட்டால் பதிலுக்கு நானும் தானே அடித்துள்ளேன், இதனால் விஷயத்தை பெரிது படுத்த விரும்பவில்லை என்று பதிலளிக்கிறார் சபீதா.

சமரசம்

சமரசம்

சுகுமாறன் வீடு எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது மாலை 6 மணிக்கு தான் அவர் வீட்டுக்கு சென்றேன், என்கிறார் சபீதா ஆனால் அதிகாலை 3 மணியளவில் சண்டை வந்ததாக அவரே கூறுகிறார். எது எப்படியோ நள்ளிரவில் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்ட இருவரும் தற்போது சமரசம் ஆகிவிட்டார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+