அந்தப் பெண் கெளதமை பார்ப்பார் பாருங்க, அப்படி ஒரு "ஆசை தோசை அப்பள" பார்வை!
சென்னை: இதோ மீண்டும் ஒரு "கள்ளக்காதல்" பூக்கப் போவது போலத் தெரிகிறது.. வாணி ராணி சீரியல் போகும் போக்கைப் பார்க்கும்போது.
சீரியஸாக யோசிப்பதை விட சீரியலுக்காக யோசிப்பதுதான் ரொம்ப சுலபமாக இருக்கிறது. காட்சிகளில் டொக்கு விழுகிறது என்றால் உடனே ஒரு கள்ளக் காதலை செட்டப் செய்து மக்களை செதில் செதிலாக அதிர வைக்கிறார்கள் சீரியல்காரர்கள்.
ஒவ்வொரு சீனுக்காகவும் ரொம்பவெல்லாம் மெனக்கெடுவதில்லை இவர்கள். ஏதாவது ஒரு பரபரப்பை அரங்கேற்றி சீன் போட்டு பரவசப்படுத்தி விடுகிறார்கள் இந்த சீன் கானரிகள்..!
ஒவ்வொரு சீரியலையும் உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தால், பத்து பதினைந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சமமான ஆக்ஷன் காட்சிகள், ஏகப்பட்ட பலான படங்களுக்குத் தேவையான கள்ளக்காதல் கருக்கள் என நிறைய மேட்டர் தேரும் நமக்கு.

எங்கே அந்த கள்ளக்காதல்
சீரியலில் ஏதாவது டல்லடித்தால் உடனே பரபரப்புக்குத் தாவி விடுகிறார்கள். கிட்டத்தட்ட டிவிகளில் வரும் அத்தனை சானல்களிலும் ஏதாவது ஒரு கள்ளக்காதல் கரைபுரண்டு ஓடிக் கொண்டுதான் உள்ளது.

சே சே சீரி்யலா இது
கள்ளக்காதல் சீன் ஏதாவது இல்லாவிட்டால் அடடே இது சீரியலே இல்லைங்க என்று மக்களே சொல்லி விடுவார்கள் போல. அப்படி ஒரு எழுதப்படாத சட்டமாக இந்த கள்ளக்காதலை மாற்றி விட்டனர் சீரியல் சீனிச்சாமிகள்.

வாணி ராணி
"அறிவுஜீவி" நடிகையாக கருதப்படும் ராதிகாவின் வாணி ராணி சீரியலிலும் கள்ளக் காதல் எட்டிப் பார்க்கப் போகிறது. அதிலும் வாணியின் மகனையே கள்ளக்காதல் வலைக்குள் தள்ளப் போவது போலத் தெரிகிறது.

பரபரன்னு ஏதாச்சும் வேணுமே
சமீப காலமாக வாணி ராணியில் பெரிய அளவில் பரபரப்பைக் காணோம். இதனால் கவர்ச்சி அம்சமாக கள்ளக்காதலை கையில் எடுக்கவிருப்பது போலத் தெரிகிறது.

காப்பாத்துங்க காப்பாத்துங்க
நேற்று ஒரு புது சீனை உள்ளே செருகி விட்டார்கள். வாணியின் மகன் கெளதம் பைக்கில் தனது பயிற்சியில் மீண்டும் சேருவதற்காக செல்கிறான். வழியில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் காரில் கடத்திச் செல்கிறது. உடனே கெளதம், சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி பைக்கில் சேஸ் செய்து அந்தக் கும்பல் இருக்கும் இடத்திற்கு போகிறார்.

என்ன பார்வை உந்தன் பார்வை!
போன இடத்தில் வழக்கம் போல நாலு குத்து, அஞ்சு மிதி, ஆறு அடி என்று வில்லன்களை துவம்சம் செய்து விட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கொண்டு ஓடி வருகிறார்.. ஸ்டாப் ஸ்டாப்.. இந்த இடத்தில் அந்தப் பெண் கெளதமை பார்ப்பார் பாருங்கள்.. அப்படி ஒரு "ஆசை தோசை அப்பள" பார்வை. விழுங்கி விடுவது போல ஒரு பார்வை.

பைக்கில்.. தோளில் கை போட்டு
பைக்கில் வேகமாக விரைகிறார் கெளதம். பின்னால் சைலோ (இந்தக் காரைப் போய் ரவுடிக் காராக்கிட்டீங்களேடா படு பாவிகளா..!) காரில் வில்லன்கள் சேஸிங்.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண் கெளதம் தோள் மீது கை போடுகிறார். பார்த்து பார்த்து சிரிக்கிறார்.. ரசிக்கிறார்.. ஓஹோன்னானாம்!

அட இங்கயுமா..!
ஒரு வழியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்கிறார்கள். அங்கு வந்த பிறகும் கூட அப்பெண் விடவில்லை. இருக்கையில் உட்கார்ந்தபடி கெளதமையே விடாமல் பார்க்கிறார்.. சிரிக்கிறார்.. தவிக்கிறார்.. என்னென்னமோ ஆகுதுப்பா அவங்களுக்கு!

அடுத்தபடியாக
இந்தக் காட்சிகளையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அனேகமாக கெளதம் மீது இப்பெண் ஒரு தலைக் காதல் கொண்டு பின்னாலேயே கொஞ்சம் எபிசோடுகளுக்குச் சுற்றப் போவது போலத் தெரிகிறது.

அம்மா வில்லியா இருப்பாங்களோ!
மேலும் அந்தப் பெண்ணின் அம்மா கேரக்டராக வருபவரைப் பார்த்தால் கிட்டத்தட்ட புதிய வில்லி அறிமுகம் போலத் தெரிகிறது. அவருடைய நடை உடை பாவணையைப் பார்த்தால் அப்படித்தாங்க தெரியுது.
வாணிம்மா.. நல்லபடியா கொண்டு போங்கம்மா சீரியலை.. சின்னப் பசங்கக் கூட ரசிச்சுப் பாக்குறாங்கல்ல..!
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications