அந்த ஒரு முக்கிய கோரிக்கை.. வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் நோக்கம்.. அதிமுக அரசு நிறைவேற்றுமா?
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சிஏஏ போராட்டம், தமிழக அதிமுக அரசுக்கு மிகப்பெரிய அழுத்தமாக மாற தொடங்கி உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சிஏஏ போராட்டம், தமிழக அதிமுக அரசுக்கு மிகப்பெரிய அழுத்தமாக மாற தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகிறது.
நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்

என்ன கோரிக்கை
வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் மிக முக்கிய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். சட்டசபையில் இது தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வண்ணாரப்பேட்டையில் போராடும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது சிஏஏவை அமல்படுத்த மாட்டோம், என்ஆர்சியை கொண்டு வர மாட்டோம் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அங்கு போராட்டம் செய்யும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரளா எப்படி
முன்னதாக கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதல் முறையாக தீர்மானம் இப்படி நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்திலும் இதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் புதுச்சேரியிலும் இதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேறு போராட்டம்
புதுச்சேரி தீர்மானத்தை தொடர்ந்துதான் இந்த போராட்டம் தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்திலும் இதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். வண்ணாரப்பேட்டையில் நடந்த போலீஸ் தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இன்று போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சிஏஏவிற்கு பாஜக கூட்டணியில் இருக்கும் மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க்கவில்லை.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார் போன்றவர்கள் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகத்தில் அதிமுக இப்படி தீர்மானம் நிறைவேற்றுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதிமுக - பாஜக தமிழகத்தில் வலுவான கூட்டணியை வைத்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தில் சிஏஏவிற்கு எதிரான தீர்மானம் வருமா என்பது கேள்வியே. ஆனால் இந்த தீர்மானம் நிறைவேறும் வரையில் இந்த போராட்டம் நிற்காது என்றும் கூறுகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications