அன்புமணிக்கு எதிராக களமிறங்கும் வன்னிய அமைப்புகள்… தர்மபுரியை வெல்வாரா?
சென்னை: பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக ஒருவழியாக 8 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. மற்ற 7 தொகுதிகளை விட தர்மபுரி தொகுதியில் களமிறங்கும் அன்புமணி ராமதாஸ்தான் அதிக சவாலை சந்திக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அன்புமணிக்கு எதிராக களமிறங்கப் போவது, விடுதலை சிறுத்தைகளோ, தலித் அமைப்புகளோ இல்லை, வன்னியர் அமைப்புகள்தானாம்.
வன்னியர் சங்கப் போராட்டங்களை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைத்த மாவட்டம் தர்மபுரி. இந்த மாவட்டத்தில்தான் 75 சதவிகித வன்னியர்கள் இருக்கின்றனராம்.

அன்புமணிக்கு அதிக வாக்குகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி தொகுதி வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிமுகப்படுத்திப் பேசிய டாக்டர் ராமதாஸ், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உசுப்பேற்றினார்.

வன்னியர்கள் வாழவைப்பார்களா?
பாமகவை வாழவைத்த மாவட்டம் தர்மபுரி. ஆனால் அங்கிருந்துதான் பாமகவிற்கு அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாமகவின் வீழ்ச்சிக்குக் காரணமான தேமுதிக உடன் இணைந்துள்ளது. இதனை வன்னியர்கள் ஒருபோதும் விரும்பவில்லை என்கின்றனர்.

களமிறங்கும் புத. இளங்கோவன்
தர்மபுரியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள அன்புமணிக்கு எதிராக புத. இளங்கோவனை களமிறக்க வன்னியர் அமைப்புகள் முடிவு செய்துள்ளனராம். பாமக ஆரம்பிக்கப்பட்ட போது, முக்கிய தலைவராக இருந்தவர் புத.இளங்கோவன்.

சரியான போட்டி
புத. இளங்கோவன், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்றவர். பாஜக சார்பாக போட்டியிட்ட போதும் அதற்கு இணையான ஓட்டுகள் வாங்கியவர். வன்னியர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்குகள் உண்டு. அவரை களமிறக்கினால், அன்புமணியின் வெற்றி வாய்ப்பு சிரமம்தான் என்கின்றனர் பாமகவினர். அன்புமணியை அட்டாக் செய்ய வன்னியர் பங்காளிகளே களமிறங்குவதால், கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும் அன்புமணி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications