ஈரோடு: பட்டா பெயர் மாற்ற ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
பட்டா பெயர் மாறுதலுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஈரோடு பழமங்கலம் விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே பழமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. தாத்தாவின் பெயரில் உள்ள தந்தை பொங்கியண்ணன் பெயருக்கு மாற்றம் செய்ய பாபு விரும்பினார். மொடக்குறிச்சி பழமங்கலம் விஓஏ (கிராம நிர்வாக அலுவலர்) சரவணன்,45) என்பவரை பாபு அணுகினார். அவர் ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications