குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் – டிசம்பர் 15க்குள் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 15க்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வனபாதுகாவலர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது 2 காலி இடங்கள் மட்டுமே உள்ளன.
அந்த 2 இடங்களும் பெண்களுக்குத்தான். ஆனால் தேர்வு முடிந்து முடிவு வெளியிடும்போது ஆண்கள் காலியிட பணிகளும் வரக்கூடும் என்று நினைத்து ஆண்களும் தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. 9 ஆம்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு நடைபெற்றதை சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு ஆட்களை நியமிக்க எழுத்துத்தேர்வு நடைபெற்று வருகிறது. குரூப்-2 ஏ காலிப்பணியிடங்கள் 2846 இருந்தன. அந்த இடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது.
தேர்வை 4 லட்சத்து 23 ஆயிரத்து 800 பேர் மட்டுமே எழுதினார்கள். அதுபோல கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 2 ஆயிரத்து 342 காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது.
இந்த இரு தேர்வுகளின் முடிவுகளும் 15 ஆம் தேதிக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தயாராக உள்ளது. மேலும் 33 சுகாதார மருத்துவ அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான எழுத்துத்தேர்வும் நடைபெற உள்ளது. இது குறித்து அறிவிப்பு வர உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications