வாக்குச்சாவடி செலவாக ரூ 2,500 தேவை... தேர்தல் ஆணையத்தை கண்டித்து வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர்: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து அரியலூர், மயிலாடுதுறை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த மாதம் 24ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சாவடி பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தேர்தல் பணிப் படியை அன்றே தேர்தல் ஆணையம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இதைக் கண்டித்தும், வாக்குச்சாவடி செலவினங்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் அரியலூர், சீர்காழி, மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களிலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications