'வர்தா' என்றால் சிவப்பு ரோஜாவாம்... 'பாகிஸ்தான்' வைத்த பெயர்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'வர்தா' புயலுக்கு தமிழில் சிகப்பு ரோஜா என்று அர்த்தம். இந்தப் பெயரை பாகிஸ்தான் சூட்டியுள்ளது.
சென்னை: சென்னையை தாக்குவதற்காக வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் வர்தா புயலுக்கு தமிழில் சிகப்பு ரோஜா என்று அர்த்தமாம். இந்த பெயரை நமது அண்டை நாடான பாகிஸ்தான் சூட்டியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னையை தாக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய பலத்த காற்று வீசி வருகிறது. கனமழையும் கொட்டி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயலின் பெயர் குறித்த சுவாரசிய தகவல்கள் சில வெளியாகியாயுள்ளன. வர்தா என்பதன் அர்த்தம், அந்தப் பெயர் எந்த மொழியை சேர்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

வர்தா என்றால் சிகப்பு ரோஜா
சென்னை கடக்க காத்துக் கொண்டிருக்கும் புயலின் பெயர் வர்தா. வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்ததமாம்.

யார் வைத்த பெயர்
வர்தா என்பது ஒரு உருது சொல் ஆகும். இந்தப் பெயரை புயலுக்கு சூட்டியது நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஆகும்.

பெயர் வைக்கும் நாடுகள்
இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு 8 நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டுகின்றன. அவை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு , ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகும்.

நாடா புயலுக்கு யார் பெயர் வைத்தது
அண்மையில் தமிழகத்தை தாக்குவதாக மிரட்டி வந்த தடம் தெரியாமல் சென்ற நாடா புயலுக்கு ஓமன் நாடு பெயர் சூட்டியது. நாடா என்றால் தமிழில் பெருந்தன்மை என்று அர்த்தம்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications