பேஸ்புக்கின் புதிய "பவர் ஸ்டார்" வரிச்சியூர் செல்வம்.. "டெர்ரர்" படங்கள்... "டெர்ரிபிள் கமென்டுகள்"!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பேஸ்புக் கண்டுபிடித்த மார்க் இப்படியெல்லாம் நடக்கும் என்று சத்தியமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். சும்மா கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள் பேஸ்புக்கில். இந்த வரிசையில் லேட்டஸ்ட் ரகளையாக வந்து சேர்ந்துள்ளார் வரிச்சியூர் செல்வம்.

வரிச்சியூர் செல்வம் குறித்துத் தெரியாதவர்கள் தெற்கத்தி சீமையில் இருக்க முடியாது. பிரபலமான தாதாவாக வலம் வந்தவர் செல்வம். ஏகப்பட்ட வழக்குகள், மோதல்கள், கைதுகள், தலைமறைவுகள் என மதுரையைக் கலக்கியவர் செல்வம்.

இப்போது நீட்டாக பேஸ்புக் கரையோரம் ஒதுங்கி கலகலப்பை ஏற்படுத்தி வருகிறார் செல்வம். அவர் ஆரம்பித்துள்ள பேஸ் புக் பக்கம் ஏகப்பட்ட பாலோயர்களுடன் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடமாடும் நகைக்கடையாக

நடமாடும் நகைக்கடையாக

தமிழகத்தில் முன்பு சென்னையைச் சேர்ந்த ஆதிகேசவன் என்ற பிரபலம் உடம்பு நிறைய நகைகளைப் போட்டுக் கொண்டு கலக்கி வந்தார். கடைசியில் அவர் ஜெயிலுக்குப் போனார். இப்போது வரிச்சியூர் செல்வம் உடம்பெல்லாம் நகைகளைப் பூட்டிக் கொண்டு கொடுத்துள்ள விதம் விதமான போஸ்கள் குறித்துத்தான் பேஸ்புக் முழுக்க மாய்ந்து மாய்ந்து பேசி வருகிறார்கள்.

அண்ணே எனக்குக் கொஞ்சம் கொடுண்ணே பொழச்சுக்குவேன்!

அண்ணே எனக்குக் கொஞ்சம் கொடுண்ணே பொழச்சுக்குவேன்!

வரிச்சியூர் செல்வம் போட்டிருக்கும் நகைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன அவரது பாலோயர்களில் ஒருவர், அண்ணை ஒரே ஒரு நகையைக் கழட்டிக் கொடுண்ணே நான் பொழச்சுக்குவேன் என்று கமெண்ட் போட்டுள்ளார். அதற்கு செல்வமும் லைக் போட்டுள்ளார்.

கை, கால் கழுத்து.. நிறைய

கை, கால் கழுத்து.. நிறைய

கை விரல்கள் முழுவதும் மோதிரங்கள், கைகளில் பெரிய பெரிய உருளை சைஸிலான வளையங்கள், கழுத்தை போட்டு அமுக்கம் வகையில் ராட்சத சங்கிலிகள் என நடமாடும் சரவணா செல்வரத்தினம் ஜூவல்லரி போல காட்சி தருகிறார் செல்வம்.

பரேக் சட்டை மட்டும்தானே...

பரேக் சட்டை மட்டும்தானே...

மகாராஷ்டிர மாநிலத்தில் பங்கஜ் பரேக் என்ற தொழிலதிபர் தங்கச் சட்டையுடன் வலம் வருவதை பெரிதாக பேசினார்கள். ஆனால் செல்வம் உடம்பில் உள்ள நகைகளைக் கணக்கெடுத்தால் எவ்வளவு தேறும் என்று தெரியவில்லை.

ஒரிஜினலா.. இல்லாட்டி கவரிங்காண்ணே!

ஒரிஜினலா.. இல்லாட்டி கவரிங்காண்ணே!

ஆனால் இதெல்லாம் ஒரிஜினல் நகைகள்தானா அல்லது கல்யாணி கவரிங்கா என்று தெரியவிலல்லை.

அண்ணன், பீரு சாப்பிடும் அழகைப் பாருடா!

அண்ணன், பீரு சாப்பிடும் அழகைப் பாருடா!

பல படங்களில் பீர் பாட்டிலுடன் பீச்சிலும், நண்பர்களுடனம் டண்டணக்கா போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் செல்வம். பாதிக்கும் மேற்பட்ட படங்களில் அவர் அரை டவுசரிலும், சாக்ஸ் போடாத கேன்வாஸ் ஷூவிலும்தான் கேஷுவலாக மிரட்டுகிறார்.

கூலர் போட்ட தலைவா...!

கூலர் போட்ட தலைவா...!

நிறையப் படங்களில் அவர் கூலர் கண்ணாடிகளுடன் விதம் விதமாக போஸ் கொடுத்திருப்பது அப்படியே அள்ளுதுஜி!

வெளிநாட்டுப் பெண்களுடன்...!

வெளிநாட்டுப் பெண்களுடன்...!

சில படங்களில் அவர் வெளிநாட்டுப் பெண்களுடன் பீச்சிலும், பிற சுற்றுலாத் தளங்களிலும் தோள் மேல் கை போட்டு போஸ் கொடுத்திருப்பதும் சிரிப்பை வரவழைக்கிறது.

வலியக்கக் கூப்பிட்டு போஸ்

வலியக்கக் கூப்பிட்டு போஸ்

அதேபோல தாஜ்மஹால், டெல்லி செங்கோட்டை போன்ற இடங்களுக்குப் போய் அங்கு சுற்றுலாவுக்கு வந்த வட இந்தியர்களை வலியக்கக் கூப்பிட்டும் போஸ் கொடுத்து புன் சிரிப்போடு பேஸ்புக்கை நிரப்பியுள்ளார்.

பவர் ஸ்டாருக்குப் போட்டியாக

பவர் ஸ்டாருக்குப் போட்டியாக

முன்பு இப்படித்தான் பவர் ஸ்டார் சீனிவாசனும் விதம் விதமாக போஸ் கொடுத்து பேஸ்புக்கை அதகளம் செய்தார். ஆனால் அவரைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது வரிச்சியூராரின் போஸ்கள்..

செல்வம் எடுத்த செல்பியைப் பாரு புள்ள!

செல்வம் எடுத்த செல்பியைப் பாரு புள்ள!

பல படங்கள் செல்பியாக உள்ளன. முறைத்தபடியும், விறைத்தபடியும், உட்டாலங்கடியாக போஸ் கொடுத்தபடியும் தலைவர் கலக்கியுள்ளார்...!

மகன் படமும்

மகன் படமும்

கூடவே தனது மகனுக்கும் நகைகளைப் போட்டு, அழகு பார்த்து விதம் விதமாக புகைப்படம் எடுத்துப் போட்டுத் தாக்கியுள்ளார் செல்வம்.

வித் சர்ட்.. வித்தவுட் சர்ட்!

வித் சர்ட்.. வித்தவுட் சர்ட்!

அதிலும் சட்டை போடாமல் பல படங்களிலும், அரை குறை சட்டையுடன் பல படங்களிலும் அதகளமாக காட்சி தருகிறார் செல்வம்.

5 ரூவாக் கண்ணா்டியை வச்சு எத்தனை போட்டோ!

5 ரூவாக் கண்ணா்டியை வச்சு எத்தனை போட்டோ!

5 ரூபாய்க்கு சாலையோரமாக விற்குமே அந்த குளிர் கண்ணாடியை வாங்கிப் போட்டுக் கொண்டு விதம் விதமான போஸ்களில் விஜயகாந்த் போல நாக்கைக் கடித்தும், மடக்கியும், முழித்தும், மிரட்டியும்.. முடியலைடா சாமி போஸ்களின் கோர்வையைப் பார்த்தபோது!

சலூன்லயுமாண்ணே...!

சலூன்லயுமாண்ணே...!

அண்ணன் சலூன் கடைக்குப் போனால் கூட விட மாட்டார் போல. அங்கே முடியை பிடித்து சலூன்காரர் வெட்டுவதையும் போட்டோ எடுத்துப் போட்டு வைத்திருக்கிறார்..

ஒரிஜினல் பவர் ஸ்டாருடன்.. கிளிக்!

ஒரிஜினல் பவர் ஸ்டாருடன்.. கிளிக்!

லேட்டஸ்ட் பவர் ஸ்டாராக மாறியுள்ள செல்வம், ஒரிஜினல் பவர் ஸ்டாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்Kளும் கூட இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சூப்பர் ஜி சூப்பர் ஜி சூப்பர் ஜி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+