வாயில் நீர் ஊறும் ஐஸ்கிரீம் வகைகள் – படிக்க மட்டும் இல்லை சுவைக்கவும்தான்!
சென்னை: ஐஸ்கிரீம்....இந்த வார்த்தையைக் கேட்டாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரது வாயிலும் நீர் ஊறத்தான் செய்யும்.
சேமியா ஐஸ், பால் ஐஸ் என்று துவங்கிய ஐஸ்கிரீமின் வாழ்க்கை இன்று பல்வேறு பிளேவர்களில், பல்வேறு வண்ணங்களில் கிடைத்து நம்மை குழந்தைகள் போல குதூகலிக்க வைக்கின்றன.
அத்தகைய ஐஸ்கிரீம் மகிழ்ச்சி வெறும் வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச் ஆகியவற்றுடன் மட்டும் நின்றால் போதுமா? அதான் உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான ஐஸ்கிரீம் வகைகள்.

ஸ்டிக்கி டாபி புடிங்:
டாபி என்னும் சாக்லேட்களும், பேரீச்சையும் சேர்ந்த கிரீமினால் ஆன ஐஸ்கிரீம். சாப்பிட்டால் சாக்லெட்டின் கடிப்பும், பேரீச்சையின் சுவையும் இணைந்து நம்மை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.
செர்ரி வொயிட்:
செர்ரி வொயிட் என்னும் இந்த ஐஸ்கிரீமில் செர்ரி பழத்தின் சாறால் ஆன சார்பெட்டும், வெள்ளை சாக்லேட் சாஸும் இணைந்து நம்முடைய நாக்கில் ஒரு இனிப்பு நடனமே நடத்தும் என்றால் மிகையில்லை.
லெமன் ஹலோ:
எலுமிச்சை கதப்புடன் வெண்ணிலாவும், தேங்காய் சர்க்கரையும் இணைந்து தயாரிக்கப்படும் இந்த ஐஸ்கிரீமில் எலுமிச்சையின் புளிப்பும், வெண்ணிலாவின் இனிப்பும், தேங்காயின் சுறுசுறுப்பும் இணைந்து ஹப்பப்பா! நாக்கை கட்டுப்படுத்தவே முடியாது.
யின் - யாங்:
வெண்ணிலாவுடன் 5 வகையான சைனீஸ் மசாலா பொருட்களும், பைனாப்பிளும், உப்பு சுவையுடைய வெண்ணெயும் கலந்த இந்த ஐஸ்கிரீமின் சுவை வித்தியாசமாக இருந்தாலும் வியக்க வைக்கும் சுவைதான்.
சாக்லெட் கேரமல் பார்:
வெளியில் சாக்லெட்டால் ஆன லேயருடன், கடித்தால் உள்ளே வழியும் கேரமலின் சுவையில் நாம் உலகத்தையே மறந்து போவது நிச்சயம்.
மில்க் அண்ட் பீநட்:
முழுவதும் பாலால் ஆன ஐஸ்கிரீமில் வேர்க்கடலை நிறைந்த இதன் சுவையானது கறுக், மொறுக் என்று கண்களை சொக்க வைப்பது உண்மை.
மைசூர்பாக் சாக்கோ பார்:
வெளியில் சாக்லெட்டுடன், உள்ளே நம்முடைய ஸ்பெஷல் ஸ்வீட்டான மைசூர் பாக்கும் இணைந்து அய்யோடா சாப்பிட்டு முடிக்க மனமே வராது.
சீக்கிரம் போங்க:
என்ன இப்பவே நாக்கு ஊறுதா? படிக்கறதோட இல்லாம சீக்கிரம் போய் இந்த மாதிரி கிடைக்கிற பலவகையான ஐஸ்கிரீமை சுவைக்கற வழியைப்பாருங்கப்பா குடும்பத்தோட.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications