வாசன் கட்சியை உடனே உயரத்துக் கொண்டு போவது எப்படி?.. பலூன் தான்!
சென்னை: பட்டம் பற.. பற.. என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்து பாடலைபோல இப்போது பலூன் பற..பற.. என்று பாடிக்கொண்டுள்ளனர் வாசன் கட்சியினர்.

காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். திருச்சியில் வரும் 28ம் தேதி கட்சி அறிமுக மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

வாசன் கட்சியை பிரபலப்படுத்த பிரபல வியாபார நிறுவனங்களின் விளம்பர யுத்தியை கையில் எடுத்துள்ளனர் அக்கட்சியினர். அதாவது பலூன் மூலம் விளம்பரம் செய்வது. பலதரப்பு மக்களும் புழங்கும் கிண்டியில் பலூன் விளம்பரம் அமர்க்களப்படுகிறது.

வாசன் முகம் பொறிக்கப்பட்ட பிரமாண்ட பலூன்கள் அங்கு பறக்கவிடப்பட்டுள்ளன. அந்த பலூனில் பெருந்தலைவர் காமராஜர், மூப்பனார் ஆகியோர் படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் சிக்னலில் நிற்போர், வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலதரப்பட்ட மக்களையும் இந்த விளம்பரம் ஈர்த்துள்ளது.
திருச்சி மாநாடு நடைபெறும் வரை பலூன் பற..பற.. என்று பலூனை பார்த்து பாடிக்கொண்டிருக்கபோகின்றனர் கட்சி நிர்வாகிகள்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications