ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே டீசல் விலையை ஏத்தியாச்சா?.. ஜி.கே.வாசன் கண்டனம்!
சென்னை: காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியபோதெல்லாம் கண்டனம் தெரிவித்தது பாஜக. ஆனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த 6 நாட்களிலேயே டீசல் விலையை ஏற்றியுள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணை விலை ஏறும் போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதே போல சர்வதேச சந்தையில் விலை இறங்கும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.

அப்போதெல்லாம் விலை ஏற்றத்தை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் பிரசாரத்தின் போது விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்றும், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவோம் என்று கூறிய பாரதீய ஜனதா கட்சி இன்று பதவி ஏற்ற 6 நாட்களிலே டீசல் விலையை 50 பைசா உயர்த்தியிருக்கிறார்கள்.
இது சாதாரண மக்களை பாதிப்பதோடு, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே மத்திய அரசு இந்த விலையேற்றத்தை மக்கள் நலன் கருதி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications