"ஞானம்" மீது ஜி.கே.வாசன் கடும் கோபமாமே...
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் மீது முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சியில் இப்போது ஜி.கே.வாசன் அணிக்கும் ப.சிதம்பரம் அணிக்கும் இடையேதான் உக்கிர உட்கட்சி யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஜி.கே.வாசனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; தமிழகத்தில் ஜி.கே. வாசன் தலைமையில் நல்லாட்சி அமைத்திடுவோம் என்று வாசன் ஆதரவாளர்கள் திடீர் திடீரென போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ப.சி. முதல்வர் வேட்பாளர்
பதிலுக்கு சிதம்பரம் கோஷ்டியும், ப.சியைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அத்துடன் வாசன் தரப்பு வெளியிடுகிற ஒவ்வொரு போஸ்டர் குறித்தும் காங்கிரஸ் மேலிடத்துக்கு புகார் மேல் புகாராக அனுப்பியும் கொண்டிருக்கிறது ப.சி. கோஷ்டி

ஞானம் போட்ட தடை
இந்த பஞ்சாயத்தில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் சுவற்றில் போஸ்டர் ஒட்டக் கூடாது, சத்தியமூர்த்தி பவனுக்குள் நோட்டீஸ் எதனையும் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் ஞானதேசிகன் உத்தரவிட்டிருக்கிறாராம்.

கடுப்பில் வாசன் கோஷ்டி
இது ஜி.கே.வாசன் தரப்பினரை எரிச்சலடைய வைத்துள்ளதாம். 'ஞானதேசிகன் நம்ம ஆள்தானே..அவரே எப்படி இந்த மாதிரி உத்தரவிடலாம்" என்று எகிறியபடியே வாசனிடம் முறையிட்டுள்ளனர்.

ஜி.கே.வாசனுக்கு சந்தேகம்
இதனால் ஞானதேசிகன் மீது ஜி.கே.வாசனும் கோபத்தில் இருக்கிறார் என்கின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள். நமக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டே உள்ளடி வேலைகளில் எதுவும் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகமும் ஜி.கே.வாசனுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications