ரஜினி யதார்த்தமான மனிதர்... சொல்கிறார் ஜி.கே.வாசன்
ரஜினிகாந்த் யதார்த்தமான மனிதர் என்றும் இளைஞர்கள் மது, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த யதார்த்தமான மனிதர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது. அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்ததாக கூறுகிறார்கள். எனவே சட்டம் கடமையை செய்தாலும் அதன் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.
1996 தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது விபத்து என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. ரஜினியை நட்பு அடிப்படையில் பலர் சந்திக்கலாம். அவர் மீது மரியாதை செலுத்துபவர்கள் சந்திக்கலாம். இவை அனைத்தையும் ரஜினி புரிந்திருப்பார்.
என்னால் அரசியல் கட்சியினர் லாபம் அடைந்தனர் என்று கூறியிருப்பது, அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அவர் யதார்த்தமான மனிதர். உண்மையான மனிதர். இளைஞர்கள் மது, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று அவர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
சட்டசபைத் தேர்தலில் கூட்டணிதான் வெற்றியை தீர்மானிக்கும். யாரும் இனி தனிப்பட்ட முறையில் ஆட்சி செய்ய முடியாது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அதிகாரிகள் ஆட்சி செய்வதை மக்கள் விரும்பமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications