ஜி.கே.வாசனுக்காக இணையதளமும் தொடக்கம்.. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனும் ரெடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக் கட்சித் தலைவரான ஜி.கே.வாசனை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

காங்கிரஸிலிருந்து வெளியேறியுள்ள ஜி.கே.வாசன் புதுக் கட்சி தொடங்குகிறார். வருகிற 28ம் தேதி திருச்சி மாநாட்டில் இந்தக் கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவுள்ளன.

கட்சிக்கு ஆதரவை பல்வேறு மார்க்கங்களில் திரட்டி வருகின்றனர். மேலும் கட்சிக்கு ஆதரவு தளத்தையும் பெருக்கி வருகின்றனர்.

ஏற்கனவே கட்சியின் மாநாட்டு விளக்க பிரசாரம் தொடங்கியுள்ளது. சிடியும் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று புதிய இணையதளத் தொடக்க விழா நடந்தது.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது ஜி.கே.வாசன் கூறுகையில், புதிய இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் விதமாக ‘ஐ சப்போர்ட் ஜி.கே.வாசன்' என்னும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை எங்கள் மாணவர் அணியினர் உருவாக்கியுள்ளனர்.

Vasan supporters launch new website

இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எங்கள் இயக்கத்தை பிரபலப்படுத்த www.gkvasan.co.in என்ற இணைய தளத்தையும் தொடங்கியுள்ளோம்.

வரும் வாரத்தின் முதல் 3 நாட்களுக்குள் கட்சியின் பெயரை அறிவித்துவிடுவோம் என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+