ஊழல்வாதிகள் பட்டியல்...கெஜ்ரிவால் மீது ஜி.கே.வாசனும் 'கேஸ்' போடுகிறார்!
சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்வாதிகள் பட்டியலில் தனது பெயரை நீக்காவிட்டால் கெஜ்ரிவால் மீ்து அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் எச்சரித்துள்ளார்.
நேற்று கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் இந்தப் பட்டியலை வெளியிட்டு அரசியல்கட்சிகளின் கடும் கண்டனத்தை வாரிக் கட்டிக் கொண்டுள்ளார். இதையடுத்து பாஜக முன்னாள் தலைவர் கத்காரி அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் ஜி.கே.வாசனும் சட்ட நடவடிக்கையில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிர்ச்சியாக இருக்கிறது..
என் மீதும் கப்பல்துறை அமைச்சகத்தின் மீதும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சுமத்தியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எனக்கு அதிர்ச்சியும் வியப்பும் அளித்தது.

எட்டு வருஷமாக அமைச்சராக இருக்கும் நானா...
கடந்த எட்டு ஆண்டுகளாக நான் மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பை வகித்து வருகிறேன். இதில் 4 ஆண்டுகள் கப்பல்துறை அமைச்சகத்தில் மந்திரியாக இருக்கிறேன்.

எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது
என் மீது எந்த வகையான ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சகத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்ட பல மாற்றங்களை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

ஏதோ ஒரு வழக்கை வைத்து...
பிரசாந்த் பூஷன் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் கப்பல்துறை அமைச்சகத்தின் மீது ஒரு நிலப்பதிவு தொடர்பாக பதிவு செய்திருக்கும் பொதுநல வழக்கை கருத்தில் கொண்டு டெல்லி முதல்வர் என்னுடைய பெயரையும், என்னுடைய அமைச்சகத்தின் பெயரையும் ஊழல் பட்டியலில் சேர்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதற்கு நான் பொறுப்பல்ல
இந்த வழக்கு கப்பல்துறை அமைச்சகத்தில் அமைச்சராக நான் பொறுப்பேற்றதற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்ததாகும். இந்த விஷயம் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும் நான உடனடியாக தலையிட்டு நில உரிமையாளர்களுக்கு உரிய நியாயம் கிட்டுவதற்கு வழிவகை செய்தேன்.

கோர்ட்டே திருப்தி தெரிவித்து விட்ட நிலையில்
கப்பல் துறை அமைச்சகம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை பற்றி டெல்லி உயர்நீதிமன்றம் பெரிதும் திருப்தி அடைந்துள்ளது.

விஷயமே தெரியாமல் பேசுவதா...
உண்மை நிலைமை இவ்வாறிருக்க, விஷயம் ஏதும் புரியாமல் டெல்லி முதல்வர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். இது அவருடைய முதிர்ச்சியின்மையையும் ஏதாவது செய்து விளம்பரத்தைத் தேடி அலையும் அவருடைய மனப்பாங்கையும் தெளிவாக்குகிறது.

இவங்க மட்டும்தான் யோக்கியமானவர்களா...
மற்ற அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் மலிந்தவர்கள் என்றும், ஏதோ தாங்கள் மட்டுமே யோக்கியமானவர்கள் என்று நினைக்கும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் அகம்பாவப் போக்கையும் இது காட்டுகிறது.

கெஜ்ரிவாலை வன்மையாக கண்டிக்கிறேன்
அர்விந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை வாபஸ் பெற்றுக்கொண்டு அவர் உரிய மன்னிப்பும் கேட்க வேண்டும்.

நேர்மையே எனது லட்சியம்
அரசியலுக்கு வந்த நாளிலிருந்தே என்னுடைய எல்லா விஷயங்களிலும் நேர்மையுடன் நடக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்து வருகிறது. என்னுடைய நற்பெயரை நான் பலவகைகளிலும் காப்பாற்றி வருகிறேன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.

பொறுப்பில்லாத கெஜ்ரிவால்
சட்டத்தின் மீது எவ்வித மரியாதையும் இல்லாத, முன்னேற்றப்பணிகள் மீது எவ்வித அக்கறையுமற்ற பொறுப்பில்லாத ஒரு மனிதரிடம் இருந்து எனக்கு நற்சான்றிதழ் எதுவும் தேவையில்லை.

மன்னிப்பு கேள்...
அர்விந்த் கெஜ்ரிவால் தன்னுடைய அறிக்கையை வாபஸ் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பை கோரவில்லையென்றால் என்னுடைய நற்பெயரையும் புகழையும் காத்துக் கொள்ளும் வகையில் அவர் மீது சட்டரீதியாக அவதூறு வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாசன் எச்சரித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications