வயக்காட்டு பொம்மை ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல: சட்டசபையில் ஜெ., விளக்கம்
சென்னை: அதிமுக உறுப்பினர் முத்தையா பேசிய வயக்காட்டு பொம்மை என்ற சொல் மரபு மீறியது அல்ல, கெட்ட வார்த்தை அல்ல என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று அதிமுக எம்எல்ஏ முத்தையா பேசுகையில், தமிழக சட்டசபையில் 89 வயக்காட்டு பொம்மைகள் இருப்பதாகக் கூறினார். இதனால், திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கோரினர். அது ஏற்றுக் கொள்ளப்படாததால், அமளி நீடித்தது. திமுகவினரின் அமளி தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

மின்சார கோரிக்கை மீதான பதிலுரை நாளை நடைபெறும் என்றும், திமுகவினர் அவை நடவடிக்கைகளை நடத்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அவைத் தலைவர் தனபால் குற்றச்சாட்டினார்.
அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளியேறாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, தமிழில் வயக்காட்டு பொம்மை என்றால், அது ஒன்றம் நாடாளுமன்றத்தில் சொல்லக்கூடாத சொல் அல்ல. கெட்ட வார்த்தை அல்ல என்று கூறினார்.
அதிமுக உறுப்பினர் பேசுகின்ற போது யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏன் இப்படி சத்தம் போடுகின்றார்கள் என்று புரியவில்லை.
ஆளுங்கட்சி உறுப்பினர், வயலில் இருக்கும் வயக்காட்டுப் பொம்மைகளைப் பற்றிப் பேசினார். இங்கு இருக்கின்றன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களைத் தான் குறிப்பிடுகிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று புரியவில்லை என பதில் அளித்தார்.
அதிமுக உறுப்பினர் முத்தையா பேசிய வயக்காட்டு பொம்மை என்ற சொல் மரபு மீறியது அல்ல, கெட்ட வார்த்தை அல்ல என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்டாலின் பேசும்போது, ''முத்தையா பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முறையிட்டோம். சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கடைசி வரை போராடினோம். சர்வாதிகார மனப்பான்மையுடன் சபாநாயகர் செயல்படுகிறார்'' என்று குற்றம் சாட்டினார். கொத்தடிமைகளை நீக்கிவிட்டார்கள், வயக்காட்டு பொம்மைகளை நீக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர் ராமசாமி அவை ஒத்திவைப்பு குறித்துப் பேசும்போது, சட்டசபையில் இதுவரை நடந்திராத சம்பவம் நடந்துள்ளது என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications