வி.சி. வேட்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் 17,18ல் வெளியீடு - 20-ந் தேதி முதல் பிரச்சாரம்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 17, 18ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

VCK candidate list will be out on april 17,18: Thiruma

அப்போது அவர் கூறுகையில்,

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 17, 18ம் தேதி வெளியிடப்படும். தொகுதி பங்கீடு குறித்த ஆவணத்தில் கூட்டணி தலைவர்கள் இன்று மாலை கையெழுத்திடுகிறார்கள்.

இதையடுத்து தொகுதிகள் குறித்த அறிவிப்பு தேமுதிக அலுவலகத்தில் வைத்து இன்று மாலை வெளியிடப்படும். நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+