விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ரத்து: ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்கும் கல்வி உரிமை மாநாட்டிற்கு தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வர மாவட்ட கலெக்டர் பிறப்பித்த 144 தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
சேலத்தை அடுத்து உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கல்வி உரிமை மாநில மாநாட்டை இன்று மாலை நடத்துகிறது. இந்த மாநாட்டை நடத்த சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சேலம் மாவட்ட செயலாளர் நாவரசன் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் பேருந்து, வேன்களில் மேல் கூரை இல்லாத வாகனங்கள்களில் பயணம் செய்யக் கூடாது, ஆயுதங்களை எடுத்து வரக் கூடாது, சாலைகளில் செல்லும் பிற வாகனங்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது, மாநாட்டு இடம் அருகே இருக்கும் நீர்நிலைகளை சேதப்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து மாநாட்டிற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் வாடகை வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்களில் வர அனுமதி மறுத்து சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் நேற்று 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு சேலம் எஸ்.பி. சக்திவேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு சனிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
சுற்றுலா மோட்டார் வாகனம், ஆம்னிபஸ், வாடகை வாகனங்கள், அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் ஆகியவற்றில் வரக் கூடாது. மாநாடு நடக்கும் திடலுக்கு நாற்காலிகள் மற்றும் இதர பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் தற்காலிகமாக சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு டிராக்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாவில் வருவதற்கும் மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 144 தடை உத்தரவை ரத்து செய்ததுடன் மாநாட்டிற்கு தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வர அனுமதி அளித்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications