என் தலையின் மதிப்பு 7 லட்சமாக உயர்வு... வாட்ஸ் அப் மிரட்டல் குறித்து திருமா!
சென்னை: எனது தலையின் மதிப்பு ரூ.7 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று உலா வருகிறது. ஆனால், இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
திருச்சி கண்டோன்மெண்ட் அருகே உள்ள கற்பக ரட்சகி மகாலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் கடந்த சனிக்கிழமையன்று மதுஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது.
அதில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாட்ஸ் அப்பில் பேரம்...
திருமாவளனை கொல்ல வேண்டும், தலையை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் 7 லட்சம் என ஒரு கும்பல் வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்பி வருகிறது. 10 வருடங்களுக்கு முன்னால் என் தலைக்கு 5 லட்சம் என இதே போல் மிரட்டல் வந்தது. தற்போது அது 7 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயந்துவிடவில்லை.

அநாகரீகமாக பேசுபவன் இல்லை...
அரசியல் வாழ்க்கையில் சமரசம் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையாக ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காக உழைக்கிறேன். ஒரு இடத்திலும் கூட அநாகரிகமாகவோ, வார்த்தை தடித்தோ பேசியதில்லை. சிலர் பொது மேடைகளில் தலையை எடுப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என பேசியிருக்கிறார்கள். அப்படி நான் பேசியதாக ஏதாவது பதிவுகள் உண்டா?

யுவராஜ் வீரனா?
பொறியாளர் கோகுல்ராஜை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த யுவராஜ் வீரன் என்கிறார். தமிழ்நாட்டில் ஓடி ஒழிந்தவன், தலைமறைவாக கரும்புக்காட்டில் பதுங்கியிருந்தவன், அடுத்த கட்சியின் கொடியறுக்கவே தலைமறைவாக இருத்தவன் எல்லாம் இப்போது வீரன், மாவீரன் என தனது பேருக்கு பின்னால் போட்டுக்கொண்டு திரிகிறார்கள். அப்படி மாவீரன் என போட்டுக்கொள்பவர்களை கண்டு பயப்படவேண்டியதில்லை.

தலித் பகுதிகளில் அதிக டாஸ்மாக்....
சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகள் அதிகமாக டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து இந்த சமூகத்தை குடிகாரர்களாக்கி விட்டார்கள். இதை தடுக்க வேண்டும்.

மகளிர் மதுஒழிப்பு மாநாடு...
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் பிரசாரங்கள் நடத்தினோம். அதன் ஒருபகுதியாக இந்த மகளிர் மதுஒழிப்பு மாநாடு. இதை நடத்தும் நமது கட்சியினர் முதலில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தேசிய மதுக்கொள்கை...
இளைஞர்களை மதுப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அளவிலான மதுக் கொள்கையை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே மது எனும் அரக்கனிடமிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும்.

போருக்கும் தயார்...
அதேபோல் தமிழக அரசு வரும் டிசம்பருக்குள் அரசு மதுபான கடைகளை மூட வேண்டும். இல்லையென்றால் தேர்தல் அரசியலை பற்றி கவலைப்படாமல், மக்களுக்காக மதுக்கடைகளை மூடும் போருக்கும் தயாராக இருக்கிறோம்.

மக்கள் கூட்டியக்கம்...
மக்கள் கூட்டியக்கத்தை உருவாக்கியுள்ளோம். இதை எல்லோரும் பலவிதமாக பேசுகிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். நிச்சயம் மக்கள் கூட்டியக்கம் தமிழகத்தில் மாற்றத்திற்கான அரசியல் பாதையை உருவாக்கும்'' என இவ்வாறு அவர் பேசினார்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications